For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை வியாதி இருக்கா?.. இருந்தாலும் சந்தோஷமா வாழ சில ஈஸியான வழிகள்!

By Maha
|

உலகில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்படும் ஒரு பொதுவான நோய் தான் நீரிழிவு என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய். இந்த நோய்க்கு உலகிலேயே இந்தியாவில் தான் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் இன்றைய அவசர உலகில் உணவில் போதிய கவனம் செலுத்த முடியாததால், உடலில் பல நோய்கள் அழையா விருந்தாளியாக வந்துவிடுகின்றன. அதில் குறிப்பாக நீரிழிவு தவறாமல் வந்துவிடுகிறது.

சர்க்கரை நோயுடன் சந்தோஷமாக வாழும் 9 பிரபலங்கள்!!!

இத்தகைய நீரிழிவு நோய் ஒருமுறை வந்துவிட்டால், அதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் ஒருசிலவற்றை அன்றாடம் தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்து, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

மேலும் இது பரம்பரை பரம்பரையாக வரக்கூடிய நோயாதலால், நீரிழிவு நோய் இல்லாவிட்டாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில செயல்களை தவறாமல் பின்பற்றி வருவதன் மூலம் நீரிழிவு வராமலும் தடுக்க முடியும். அதற்கு முதலில் அனைவரும் மனதில் நம்பிக்கையை பதிக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகளுக்கான வெஜிடேரியன் டயட்...

அதிலும் இன்று உலக நீரிழிவு தினம் என்பதால், நீரிழிவு நோயாளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களை இன்று முதல் பின்பற்றுவதாக சபதம் எடுத்துக் கொண்டால், நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்து, நல்ல ஆரோக்கியமான மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேர்மறை எண்ணங்கள்

நேர்மறை எண்ணங்கள்

எப்போதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எதிர்மறையாக யோசித்தால், வாழ்க்கையே இருண்டுவிடும். ஆகவே நீரிழிவு வந்தாலும், அதனை நம்மால் எதிர்த்து போராட முடியும் என்று நேர்மறையாக எண்ணி, மனதில் தைரியத்தை உருவாக்கி வாழ வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கையாள வேண்டும். உதாரணமாக, எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்வதாக இருந்தாலும், அது ஆரோக்கியமானதா என்று பார்க்க வேண்டும். மேலும் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

புதிய டயட்

புதிய டயட்

நீரிழிவு இருந்தால் ஒருசில உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆகவே எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், எதனை உட்கொள்ளக் கூடாது என்று நன்கு தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் டயட்டை மேற்கொள்ள வேண்டும். இதனால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

 நட்புறவு கொள்ளவும்

நட்புறவு கொள்ளவும்

உங்களது நண்பர்களுக்கோ அல்லது வேறு யாருக்காவது நீரிழிவு இருந்தால், அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இதனால் நீரிழிவு நோயைப் பற்றி நிறைய விஷயத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.

எதிர்கால திட்டம்

எதிர்கால திட்டம்

பொதுவாக நீரிழிவு வந்தால், வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று சிலர் மனம் உடைந்து எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவேமாட்டார்கள். ஆனால் எப்போதுமே அப்படி இருக்கக்கூடாது. எதிர்கால திட்டத்தை தீட்டினால் தான், அதனை நல்லபடியாக முடிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்து, நீரிழிவை இன்னும் திறமையாக எதிர்த்து போராட முடியும்.

தொடர்ச்சியான பரிசோதனை

தொடர்ச்சியான பரிசோதனை

நீரிழிவு வந்தால், தொடர்ச்சியாக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதனால் உங்களுக்கு எவ்வளவு இன்சுலின் தேவைப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

கவனமாக இருக்கவும்

கவனமாக இருக்கவும்

நீரிழிவு நோய் இருந்தால், சிறு காயம் அல்லது அடி பட்டாலும், அவை விரைவில் ஆறாது. ஆகவே எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

நீர்

நீர்

தண்ணீரை காதலிக்க வேண்டும். ஏனெனில் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தண்ணீர் பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் தினமும் குறைந்தது 64 அவுன்ஸ் தண்ணீரை தவறாமல் குடிக்க வேண்டும்.

வைட்டமின்களை எடுத்துக் கொள்ளவும்

வைட்டமின்களை எடுத்துக் கொள்ளவும்

நீரிழிவு நோயாளிகள் தவறாமல் வைட்டமின்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் வைட்டமின்களில் பீட்டா கரோட்டினாய்டு, ஜிங்க், செலினியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை எடுத்துக் கொள்வது மிகவும் இன்றியமையாதது.

மற்ற நோய்களை தவிர்க்கவும்

மற்ற நோய்களை தவிர்க்கவும்

நீரிழிவு வந்தால், அதற்கு இலவசமாக பல்வேறு நோய்கள் வர ஆரம்பிக்கும். அதில் ஒன்று தான் ஈறுகளில் பிரச்சனை. இத்தகைய ஈறு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமெனில், தவறாமல் பல் மருத்துவரை சந்தித்து, பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

நீரிழிவுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்வது தான். இவ்வாறு செய்வதால், மன அழுத்தம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைதல் போன்றவை நிகழும்.

ஹெல்த் கிளப்

ஹெல்த் கிளப்

நீரிழிவு நோயாளிகள் சந்தோஷமாகவும், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டுமெனில், ஏதேனும் ஒரு ஹெல்த் கிளப்களில் சேர வேண்டும். இதனால் அந்த கிளப்பில் உள்ளவர்கள், உங்களுக்கு ஆதரவாகவும், நீரிழிவை எதிர்த்துப் போராட துணையாக இருப்பார்கள். இதனால் தன்னம்பிக்கையும் வளரும்.

தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும்

தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும்

எவ்வளவு தான் டயட், உடற்பயிற்சி செய்தாலும், நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்க தவறாமல் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதுவை தவிர்க்கவும்

மதுவை தவிர்க்கவும்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு பெரிய எதிர் என்றால் அது ஆல்கஹால் தான். ஆகவே நீண்ட நாட்கள் வாழ ஆசைப்பட்டால், இந்த ஆல்கஹாலை அறவே தொடாமல் இருக்க வேண்டும்.

நன்கு தூங்கவும்

நன்கு தூங்கவும்

நீரிழிவு இருந்தால், நல்ல ஓய்வு மற்றும் தூக்கம் அவசியம். எனவே நீண்ட நேரம் விழித்திருக்காமல், நன்கு தூங்கினாலேயே நீரிழிவை எதிர்த்துப் போராட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Ways To Live With Diabetes: World Diabetes Day Spcl

Celebrating World Diabetes Day, Boldsky helps you on how to live with this disease in a positive way. Take a look at some of the ways in which you can now live with Diabetes with a smile on your face.
Desktop Bottom Promotion