For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரிழிவு நோயாளிகளுக்கு காய்ச்சலா? காய்கறி சூப் குடிங்க!

By Mayura Akilan
|

Diabetes
சாதாரணமாக காய்ச்சல் வந்தாலே சோர்வு வாட்டி எடுக்கும். உடலில் ஏதாவது நோய் தொற்று ஏற்பட்டால் அதை எதிர்ப்பு போரிடும் வகையில் சக்தியை அதிகரிக்க காய்ச்சல் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காய்ச்சலின் வீரியம் அதிகரிக்கையில் உடல் நெருப்பாய் கொதிக்கும் சோர்வு ஏற்படும். இந்த காய்ச்சல் சாதாரண மனிதர்களை விட நீரிழிவு நோயாளிகளை வாட்டி எடுக்கும்.

ஏனெனில் சாதாரண ஜலதோஷம், ஃப்ளு ஜுரம், தொற்றுநோய்கள், நீரிழிவு நோயாளிகளை அதிகம் பாதிக்கும். உடல் எதிர்ப்புச் சக்திகள், நோயை எதிர்த்து போராடுவதற்காக வெளியேற்றும் ஹார்மோன்கள், ரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். எனவேதான் அமெரிக்க நீரிழிவு நோயாளிகள் சங்கம் நீரிழிவு நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கும் போது கடைபிடிக்கவேண்டியவைகளை அறிவுறுத்தியுள்ளது.

வருமுன் காப்பது நல்லது.

நீரிழிவு நோயாளிகள் காய்ச்சல் வந்தால் என்ன செய்வது என்று முன்பே உங்கள் டாக்டரிடம் கேட்டு தயாராக இருங்கள். ஏனெனில்

காய்ச்சல் அல்லது அதிக உபாதைகள் நீடித்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது கடினமாகி விடும்.

குறித்து வையுங்கள்

ரத்த சர்க்கரை அளவை கண்காணித்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். ஒரு டைரியில் உங்கள் சர்க்கரை அளவு, கேடோன் அளவு, எப்போது பரிசோதனைகள் செய்யப்பட்டன என்பதை எல்லாம் குறித்து வைக்கவும்.

திரவ உணவுகள்

நீரிழிவுக்கேற்ற டயட் உணவை மேற்கொள்ள முடியாமல் போனால் எளிதில் ஜீரணமாகும் சூப், கஞ்சி இவற்றை உட்கொள்ளவும். அடிக்கடி ஜூஸ், காய்கறி சூப் குடிக்கலாம்.

கார்ப்போ ஹைடிரேட் உணவுகள்

கார்போ-ஹைடிரேட் இல்லாத உணவு, அதிக உடல் எடையை குறைக்க உதவும். இதனால் நீரிழிவு கட்டுப்படும். அதிக சர்க்கரை, இனிப்புகள், அரிசி, உருளைக் கிழங்கு போன்ற மாவுப்பொருட்களை தவிர்த்து, பாகல்காய், பீன்ஸ் இவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மிளகு, பெருஞ்சீரகம் போன்றவற்றால் தயாரிக்கப்படும் எண்ணைகள் கணையத்தை ஊக்குவிக்கின்றன. கேரட், யூகலிப்டஸ், வெந்தயம், எலுமிச்சை இவற்றிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணைகளால் செய்யப்படும், சிகிச்சை, இன்சுலீன் உற்பத்தியை ஊக்குவிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

நோய் தொற்று அதிகரிக்கும்

நீரிழிவு நோயாளிகளுக்கு வேறு ஏதாவது தொற்று ஏற்பட்டுள்ளதாக என்று பரிசோதனை செய்யவேண்டும். ஏனெனில் யூரினரி இன்பெக்சன், பாதங்களில் நோய் தொற்று, வாய்ப்புண் போன்றவைகளில் பாதிப்பு இருந்தாலும் காய்ச்சலின் தீவிரம் அதிகரிக்கும். எனவே தகுந்த சிகிச்சை பெறவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

English summary

What Causes Fever in People With Diabetes? | நீரிழிவு நோயாளிகளுக்கு காய்ச்சலா? காய்கறி சூப் குடிங்க!

Fever is often a sign of infection somewhere in the body. It is an important immune system function that sometimes serves to kill the invading organism. People with diabetes are prone to several types of infection. It is important for a person with diabetes to seek treatment for infection or a chronic fever of unknown origin, as an acute illness can make diabetes more difficult to manage.
Story first published: Thursday, December 27, 2012, 15:16 [IST]
Desktop Bottom Promotion