For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளையான உணவுகள் வேண்டாமே! நீரிழிவு நோயாளிகளுக்கு அட்வைஸ்!!

By Mayura Akilan
|

White Food
நீரிழிவு என்பது இன்றைக்கு தவிர்க்க முடியாத நோயாக உருவெடுத்துள்ளது. பெற்றோர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக நீரிழிவு மருத்துவரிடம் அழைத்துச் சென்றாலே நமக்கும் சேர்த்து டிப்ஸ் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் மருத்துவர்கள். நீரிழிவு நோயாளிகளோ, அவர்களின் சந்ததியினரோ வெள்ளையான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். எதை உண்ணவேண்டும் என்பதை எதை உண்ணக்கூடாது என்று பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

வெள்ளை உணவுகள்

மைதாமாவு, சர்க்கரை, கார்போஹைடிரேட் அதிகம் உள்ள வெள்ளை நிற உணவுகள் நீரிழிவு நோயளிகளுக்கு முக்கிய எதிரி என்கின்றனர் நிபுணர்கள்.

கோதுமையில் இருந்து நார்ச்சத்தையெல்லாம் பிரித்த பிறகு கிடைக்கும் மைதாமாவு உடலுக்கும் குடலுக்கும் நன்மை தரக்கூடியது அல்ல என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். மாவாக அரைக்கப்பட்ட கோதுமையில், கடைசியாக மிஞ்சுவது பழுப்பு கலந்த மஞ்சள் நிற மாவு. இந்த மாவுடன் பென்சாயில் பெராக்ஸைடு என்னும் வேதிப்பொருள் சேர்க்கும்போது அது பளிச்சென வெள்ளை நிறமாகிறது. தொடர்ந்து ‘அலெக்ஸான்' என்னும் இன்னொரு வேதிப்பொருள் கலந்து மாவை மிருதுவாக்க, அது மைதாவாகிறது.

இந்த இரண்டு வேதிப்பொருட்களுமே நேரடியாக சர்க்கரை நோயை வரவழைக்கக் கூடியவை. பென்சாயில் பெராக்ஸைடு ‘ஹேர் டை'யில் பயன்படுத்தப்படுகிற ரசாயனப் பொருள். மாவிலுள்ள புரோட்டீனுடன் சேர்ந்து இதை எடுத்துக் கொள்ளும்போது உடலில் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. ‘அலெக்ஸான்' என்பது இன்னும் மோசம். சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்சிகளில், சோதனைக் கூடத்தில் எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைக்கக் கொடுக்கப்படுபவை இவை! என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

அதேபோல் சர்க்கரையும் பழுப்பு நிறத்தை மாற்றுவதற்காக பலவித ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. இதன் பின்னரே வெள்ளை வெளேர் என்ற சர்க்கரை நமக்குக் கிடைக்கிறது. இவற்றை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

வெண்ணெய், சீஸ்

வெண்மை நிறமுடைய பால் பொருட்கள் வெண்ணெய், சீஸ், கிரீம் சீஸ் போன்றவைகளை அறவே தவிர்த்து விடுங்கள். நீராவியில் வேகவைத்த உணவுகள் மட்டுமே உண்ணவேண்டும் வறுத்த பொறித்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். மேலும் நீங்கள் வாங்கும் பாக்கெட் உணவுப் பொருட்களில் சோடியம் எந்த அளவிற்கு சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து வாங்குங்கள்.

மாம்பழம் வேண்டாமே

ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் பழங்களான மாம்பழம், திராட்சை, சீதாப்பழம், ஸ்டரா பெர்ரீஸ், பேரிச்சை போன்றவைகளை தவிர்த்து விடுங்கள். மேலும் ஆலிவ், உலர்பழங்கள், கொட்டைகள் போன்றவைகளை தவிர்ப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும் என்கின்றனர் நிபுணர்கள்.

English summary

Foods to avoid with diabetes | வெள்ளையான உணவுகள் வேண்டாமே! நீரிழிவு நோயாளிகளுக்கு அட்வைஸ்!!

Food is an important tool that you can use to control diabetes and stay healthy. It is always advisable to avoid some foods if you are diabetic such as refined sugar, jam, molasses, fruit sugar, pastries, soft drinks, cream and fried foods. White sugar and white flour should be reduced drastically. Fats like butter and hydrogenated vegetable oils should also be avoided. Avoid soft drinks since these have a lot of sugar.
Story first published: Friday, September 14, 2012, 14:13 [IST]
Desktop Bottom Promotion