For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பற்கள் ஆரோக்கியம் பற்றி எழும் பொதுவான கேள்விகளும் , பதில்களும்!!

பற்களை சுத்தம் செய்வதால் தளர்வுகள் ஏற்படாது.பற்களை சுற்றி ஈறுகள் மற்றும் எலும்புகள் உள்ளது.பற்களில் படிந்திருக்கும் சுண்ணாம்பு போன்ற பொருள் ஈறுகளுக்கும் எலும்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்

By Peveena Murugesan
|

பற்களை சுத்தம் செய்வதால் தளர்வுகள் ஏற்படாது.பற்களை சுற்றி ஈறுகள் மற்றும் எலும்புகள் உள்ளது.பற்களில் படிந்திருக்கும் சுண்ணாம்பு போன்ற பொருள் ஈறுகளுக்கும் எலும்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவை பற்களின் வலுவை குறைக்கும் மற்றும் பற்களுக்கு இடையே இடைவெளியை ஏற்படுத்தும்.இந்த சுண்ணாம்பு போன்ற பொருளை குறிப்பிட்ட நேரத்தில்(6 மாதங்களுக்கு ஒரு முறை) நீக்காவிட்டால் பற்களை நிரந்தரமாக இழக்க நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேர்க்கால்வாய் சிகிச்சை (root canal) அதிக வலியை ஏற்படுத்துமா?

வேர்க்கால்வாய் சிகிச்சை (root canal) அதிக வலியை ஏற்படுத்துமா?

பற்களின் வேர்களில் ஏற்படும் சிதைவு,எலும்பு முறிவு ஆகியவற்றை சரிப்படுத்த இந்த சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைக்கின்றனர்.இந்த சிகிச்சை செய்யும்போது அனஸ்தீசியா கொடுப்பர் எனவே வலி ஏற்படாது.

பற்களின் நிறத்தை மாற்ற முடியுமா

பற்களின் நிறத்தை மாற்ற முடியுமா

ஆம்,மாற்ற முடியும்.பற்களை வெண்மையாக்கும் முறையை பின்பற்றி அதிக ப்ரகாசமாக்க முடியும்.இது ஒரு எளிய செயல்முறை.இந்த செயல்முறை ப்ளீச் சிகிச்சை மூலம் முடிவடையும்.புகை பிடித்தல்,அதிகமாக காபி/டீ அருந்துதல்,மதுஅருந்துதல் காரணமாக பற்களின் பிரகாசம் மங்கும்.

ஈறுகளில் ரத்தம் வர காரணம் என்ன?

ஈறுகளில் ரத்தம் வர காரணம் என்ன?

பற்களின் கழுத்து பகுதியில் படிந்துள்ள சுண்ணாம்பு போன்ற பொருள்,கடினமான முட்கள் போன்ற அமைப்புடைய தூரிகை,நோய் எதிர்ப்பு மருந்துகள் அதிகமாக எடுத்தல் ஆகிய காரணங்களினால் ரத்தம் வரும்.அவ்வாரு வந்தால் பல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.

வாயில் துர்நாற்றம் இருப்பின் என்ன செய்ய வேண்டும்?

வாயில் துர்நாற்றம் இருப்பின் என்ன செய்ய வேண்டும்?

பற்களில் உள்ள பிரச்சனைகளால் மட்டுமின்றி நீரிழிவு மற்றும் வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளால் வாயில் துர்நாற்றம் ஏற்படும்.

வாயின் சுகாதாரத்தை பற்றிய கவனக்குறைவு/அலட்சியம்,பற்களில் உணவு தங்குதல்,நாக்கை சுத்தப்படுத்தாமல் இருப்பது போன்ற காரணங்களினால் துர்நாற்றம் அதிகமாகும்.

பிரச்சனைகளுக்கு சிறந்த சிகிச்சையாக வாயை சுத்தமாக அலசி,ஒழுங்காக பிரஷ் செய்தல்,பற்களில் பிரச்சனை இருந்தால் குறிப்பிட்ட சிகிச்சை அளித்தல் ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது.

வாயை தினமும் சுத்தப்படுத்த வேண்டுமா?

வாயை தினமும் சுத்தப்படுத்த வேண்டுமா?

கடைகளில் வாயை சுத்தபடுத்தவென்று நிறைய பொருட்கள் கிடைக்கிறது.இவை அனைத்தும் வாய் துர்நாற்றத்திற்கு தற்காலிக தீர்வை மட்டுமே தருகிறது.

ஏன் பற்களுக்கு தரப்படும் சிகிச்சை விலை உயர்ந்தது?

ஏன் பற்களுக்கு தரப்படும் சிகிச்சை விலை உயர்ந்தது?

இந்த சிகிச்சைக்கு திறமையான தொழில்முறை அறிந்த நிபுணர்களும்,விலை உயர்ந்த சிறந்த மருத்துவக்கருவிகளும் தேவை.சிகிச்சை முடிந்த பின்பும் நோயாளியின் ஒட்டுமொத்த சுகாதார நன்மைக்காக மருத்துவர் பரிந்துரைக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

எனவே மருத்துவரை பலமுறை அணுகவேண்டும் எனவே அதிக செலவு ஏற்படுகிறது.ஆனால் இவ்வளவு செலவின் முடிவில் பற்களுக்கு நன்மையே ஏற்படுகிறது.

கடைவாய்ப்பல்லை நீக்குவது ஏன் எப்போதும் வலியைத் தருகிறது?

கடைவாய்ப்பல்லை நீக்குவது ஏன் எப்போதும் வலியைத் தருகிறது?

பற்களை நீக்கும்போது அனஸ்தீசியா கொடுத்து மயக்கப்படுத்தி விட்டு தான் நீக்குவர்.எனவே வழியைத் தராது.

கடைவாய்ப்பல் வாயின் கடைசியில் இருப்பதால் அவற்றில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது அனைத்து பற்களுக்கும் பரவ ஆரம்பிக்கும் எனவே இந்த பற்கள் பாதிப்படைந்ததும் உடனே அறுவை செய்து நீக்கிவிடவும்.

எவ்வளவு கால அடிப்படையில் பல் மருத்துவரை பார்க்க வேண்டும்?

எவ்வளவு கால அடிப்படையில் பல் மருத்துவரை பார்க்க வேண்டும்?

1 ஆண்டுக்கு குறைந்தது 2 முறை பார்க்கவேண்டும்.எனினும் பல்வலி,ஈறுகளில் ரத்தக்கசிவு,பற்களில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The most frequently asked questions on Oral health

The most frequently asked questions on Oral health
Story first published: Saturday, March 4, 2017, 15:37 [IST]
Desktop Bottom Promotion