For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லா நாட்களிலும் புத்துணர்வோடு இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பல மக்கள் தினமும் மிகவும் சோர்வுடனும்,குறைவான உள்நோக்கத்துடனும் இருக்கின்றனர்.ஆனால் ஏன் என்று தெரியாமல் இருப்பர்.அதற்கு மன அழுத்தமும் காரணம்.

By Peveena Murugesan
|

பல மக்கள் தினமும் மிகவும் சோர்வுடனும்,குறைவான உள்நோக்கத்துடனும் இருக்கின்றனர்.ஆனால் ஏன் என்று தெரியாமல் இருப்பர்.அதற்கு மன் அழுத்தமும் காரணம். அவை நீரிழிவு,தைராய்டு,ரத்த அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகும்.

வளர்ச்சிதை மாற்றத்தை சீராக வைத்திருப்பதன் மூலம் உடலை மிகவும் புத்துணர்ச்சியுடன் தினமும் வைக்க முடியும்.நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? மற்றும் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள்? இவை இரண்டிலும் சில சிறிய மாற்றங்களை கொண்டு வந்தாலே நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் உணர ஆரம்பிப்பீர்கள்.எனவே மேலே சொன்னபடி சில முயற்சிகளை செய்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலையில் இருந்து தொடங்க வேண்டும்.

காலையில் இருந்து தொடங்க வேண்டும்.

தினமும் காலையில் 15 நிமிடங்கள் கார்டியோ பயிற்சி,வேக நடை (அ) மிதமான ஓட்டம் (அ) புஷ்-அப்ஸ் காலை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் தொடங்கலாம்.

இதனால் அதிகப்படியான கொழுப்பு எரிக்கப் படுவதாக அறிவியல் பூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளது.இது நிச்சயமாக அந்த தினத்தை மிகவும் புத்துணர்ச்சியுடன் கடந்து செல்ல உதவும்.

நல்ல உணவுமுறை பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

நல்ல உணவுமுறை பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

புதிய பழங்கள்,தானியங்கள் மற்றும் லீன் புரதங்கள் இதில் அடங்கும்.துரித உணவுகள் இதில் அடங்காது.சரியான உணவை சாப்பிடுவதால் நமது உடலில் ஆற்றல் நிலைத்திருக்கும்,தசைகளை வலுவாக்கும்,கொழுப்பைக் குறைக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவு சாப்பிட நன்றாக இருக்கும் ஆனால் அது உடலுக்கு மந்த தன்மையை உருவாக்கி உடலை குண்டாக்குகிறது.நல்ல சுத்தமான உணவுமுறை உடலின் சக்தியை தூண்டி வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்குகிறது.

காலை உணவை தவிர்க்க கூடாது.

காலை உணவை தவிர்க்க கூடாது.

நம்மில் பலருக்கு தெரியாது காலை உணவு மிகவும் முக்கியமானது என்று.சிலர் காலை உணவை நேரமின்மை காரணமாக எடுக்க தவறுகின்றனர்.

ஆனால் காலை உணவை வழக்கமாக எடுப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடனும்,சரியான எடையுடனும்,மிகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பார்கள்.ஆனால் பெரும்பாலும் காலை உணவில் புரதம்,நல்ல கொழுப்பு மற்றும் ஆரோக்கியமான கார்போஹைட்ரெட் இவை அனைத்தும் இருக்குமாறு கவனித்து கொள்ளுங்கள்.

ஏனெனில் இவை அனைத்தும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்குகிறது.

உடலுக்கு தேவையான சக்தியை அடிக்கடி கொடுக்க வேண்டும்.

உடலுக்கு தேவையான சக்தியை அடிக்கடி கொடுக்க வேண்டும்.

உணவை 3 வேளைகளாகவும், சிற்றுண்டியை 2 வேளைகளாகவும் எடுக்கலாம்.சிற்றுண்டியாக குப்பை உணவுகளைத் தவிர்த்து நட்ஸ்,முட்டை,தயிர் இவற்றை எடுக்கலாம்.தினமும் உடலில் குறிப்பிட்ட அளவு கலோரி இருக்குமாறும்,கார்போஹைட்ரெட் அளவு மிகக் குறைவாகவும் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சரியான எடை வைத்திருத்தல் :

சரியான எடை வைத்திருத்தல் :

எடை குறைப்பதில் கவனத்தை செலுத்துவதை விட கொழுப்பைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

எடை குறைப்பில் கவனம் செலுத்துவதற்கு பதில் பொருத்தமான எடையில் இருக்குமாறும்,ஆரோக்கியமாக இருக்குமாறும் மற்றும் உடலின் வளைவுகளை மாற்ற பளு தூக்குதல்,கார்டியோ பயிற்சி செய்தல் இவற்றில் கவனம் செலுத்தலாம்.

வாரத்திற்கு 3 (அ) 4 முறை எடை பயிற்சி செய்வதன் மூலம் கொழுப்பு எரிக்கப்பட்டு தசைகள் வலுப் பெறுகிறது மற்றும் தசைகள் வலிமை பெறுவதால் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்குகிறது.

இந்த வழிகளை பின்பற்றினால் தினமும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.உங்கள் கனவுகளை அடைய எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to be energized for all days

Tips to be energized all days
Story first published: Thursday, February 16, 2017, 16:55 [IST]
Desktop Bottom Promotion