For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலோரியை வேகமாக எரிக்க உதவும் உணவுகள் எவை தெரியுமா?

கலோரியை வேகமாக எரிக்க உதவும் உணவுக் பொருட்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

By Peveena Murugesan
|

அனைத்து வகை உணவுகளும்,அவற்றிற்கென கலோரிகளையும்,செரிமான வழிகளையும் கொண்டுள்ளன.எதிர்மறை கலோரி உணவுகள் அது கொண்டிருக்கும் கலோரியின் அளவை விட அதிகமான கலோரியை எரிக்கும். சில உணவுகள் நீர்ச்சத்து நிறைந்தவை. மற்றும் அதிக பைபர் கொண்டுள்ளது.அவை தானியங்கள்,பருப்பு வகைகள்,காய்கறிகள், மற்றும் பழங்கள்.

Foods that burn more calories than they contain

ஆனால் அவகேடோ மற்றும் ஆலிவ் இவற்றில் அடங்காது.உடலானது நார்ச்சத்து உணவுகளை எரிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது.இதனால் பசி ஏற்படாமல் நொறுக்கு தீனிகளை தவிர்த்து உடலின் வளர்ச்சிதை மாற்றம் சீராக தனது பணியைத் தொடர்ந்து எடை இழப்பை உடனே ஏற்படுத்துகின்றது.

இந்த வகை நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் நுண் ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் கொழுப்புகள் நிறைந்த கலோரிகள் இல்லாதவை.

நிறைய காய்கறிகளும் நீர்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.நீர்ச்சத்து என்பது அதிகப்படியான நீரைக் கொண்டிருக்கும்.எடுத்துக்காட்டாக செலரி நீர் நிறைந்த எதிர்மறை கலோரி கொண்டது. கலோரியை வேகமாக எரிக்கச் செய்யும் உணவு வகைகள் இதோ உங்களுக்காக.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள்:

ஆப்பிள்:

தினம் ஒரு ஆப்பிள்,மருத்துவரை தூர வைக்கும் என்ற கூற்றுப்படி ஆப்பிள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.தற்போது ஆப்பிள்களுக்கு பலவிதமான புற்றுநோயிகளைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதய நோய்கள்,எடைக் குறைவு,கொழுப்புச்சத்து குறைவு ஆகியவற்றிற்கும் உதவுகிறது.

 ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலியில் விட்டமின்கள் சி,கே மற்றும் எ உள்ளது மற்றும் பைபர் அதிகமாக உள்ளது.புற்றுநோயை தடுக்கிறது. மற்றும் இதய நோய்களையும் வராமல் தடுக்கிறது,எனினும் ப்ரோக்கோலியை 10 நிமிடங்களுக்கு அதிகமாக வேக வைப்பதன் மூலம் ஊட்டச்சத்து அதிக அளவு குறைந்து விடும்.

பப்பாளி

பப்பாளி

100 கிராம் பப்பாளியில் 43 கலோரிகள் உள்ளது மற்றும் விட்டமின் சி அதிகம் உள்ளது.

செலரி:

செலரி:

எடைக் குறைப்பதற்கு முக்கிய பங்கு வகுக்கிறது.இது செரிமானத்தை தூண்டி அதிகமான கலோரிகளை எரிக்கிறது.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய்:

100 கிராம் வெள்ளரிக்காயில் 95% நீர் உள்ளது.இவை எடை குறைப்பிற்கு உதவுகிறது.உடலின் வெப்பநிலையை அதிகரிக்காமல் சீராக வைக்கிறது.

 தக்காளி

தக்காளி

தக்காளியில் 95% நீரும்,4% கார்போஹைட்ரடேயும் மற்றும் 1% கொழுப்பு மற்றும் புரதம் உள்ளது.வைட்டமின் சி நிறைந்தது.

தர்பூசணி:

தர்பூசணி:

இதில் 91% நீர்,6% சர்க்கரை மற்றும் குறைந்த கொழுப்பு கொண்டது.எடை குறைப்பிற்கு உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods that burn more calories than they contain

Foods that burn more calories than they contain
Story first published: Friday, March 3, 2017, 17:23 [IST]
Desktop Bottom Promotion