பிரா அணிவதில் பெண்கள் செய்யும் தவறுகள்!

Subscribe to Boldsky

பெண்களுக்கு பிரா என்பது மிகவும் அவசியமான ஒன்று. பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவதிலும் பிரா முக்கிய பங்கை வகிக்கிறது. அப்படிப்பட்ட பிராவை பெண்கள் சரியாக அணியாவிட்டால், அதனால் அவர்களின் அழகு மட்டுமின்றி, ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

தற்போது பிராக்களில் நிறைய டிசைன்கள் உள்ளன. ஒவ்வொரு டிசைனிற்கு ஏற்ப அளவுகளும் வேறுபடும். சரி, பெண்கள் தாங்கள் அணியும் பிரா சரியானது இல்லை என்பதை எப்படி அறிவது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில அறிகுறிகளைக் கொடுத்துள்ளது. அந்த அறிகுறிகள் தென்பட்டால், நீங்கள் அணியும் பிரா தவறானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தவறு #1

அச்சுக்கள்

பிரா அணியும் போது, உங்கள் சருமத்தில் அச்சுக்கள் விழுகிறதா? அப்படியெனில் நீங்கள் உங்களுக்கு பொருத்தமில்லாத தவறான அளவைக் கொண்ட பிரா அணிகிறீர்கள் என்று அர்த்தம். ஒருவேளை நீங்கள் அணியும் பிரா தோள்பட்டையில் மட்டும் அச்சை ஏற்படுத்தினால், அதன் ஸ்ட்ராப் இறுக்கமாக உள்ளதென்று அர்த்தம். அதன் ஸ்ட்ராப்பை மட்டும் தளர்த்திவிடுங்கள் போதும்.

தவறு #2

மார்பகங்கள் பிதுங்கியவாறு இருப்பது

பிரா அணியும் போது மார்பகங்கள் பிதுங்கி வெளிவருவது போல் இருந்தால், சாதாரணமாக விட்டுவிட வேண்டாம். நீங்கள் அணிந்திருப்பது உங்களுக்கு சிறியதான பிரா. உடனே மாற்றிவிடுங்கள். இல்லாவிட்டால், அதனால் உங்கள் அழகு பாழாவதோடு, ஆரோக்கியமும் கெட்டுப் போகும்.

தவறு #3

பிரா ஸ்ட்ராப் இறங்கி வருதல்

நீங்கள் அணியும் பிராவின் ஸ்ட்ராப் அடிக்கடி இறங்கி வருகிறதா? அப்படியெனில் நீங்கள் பிராவை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதென்று அர்த்தம். பிரா வாங்கி பல நாட்கள் ஆகிவிட்டால், ஸ்ட்ராப்பில் உள்ள எலாஸ்டிக் தளர்ந்துவிடும்.

 

தவறு #4

உடை அணிந்தும் பிதுங்கியவாறு தெரிவது

சிலருக்கு உடை அணிந்தும் பிராவைத் தாண்டி மார்பகங்கள் பிதுங்கியவாறு தெரியும். இப்படி உங்கள் பிரா இருந்தால், உடனே நீங்கள் அணியும் பிராவை மாற்ற வேண்டும் என்று அர்த்தம்.

 

தவறு #5

அண்டர்வயர் பிரா

அண்டர்வயர் பிரா உங்களுக்கு பிடிக்குமானால், இந்த அனுபவம் உங்களுக்கு இருக்கும். சிலர் பிராவில் உள்ள வயர் வெளிவந்தால், அதனை ஒட்டிக் கொண்டு மீண்டும் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்படி செய்வது என்பது தவறு மற்றும் ஆபத்தும் கூட. எனவே இம்மாதிரியான நிலையில் உடனே மாற்றிவிடுங்கள் அல்லது வயரை வெளியே எடுத்துவிடுங்கள்.

 

தவறு #6

இடைவெளி இருத்தல்

பிரா அணியும் போது மார்பகங்களுக்கும், பிராவிற்கும் இடைவெளி இருக்குமாயின், நீங்கள் உங்களுக்கு பொருத்தமில்லாத பெரிய பிராவை அணிந்துள்ளீர்கள் என்று அர்த்தம். இந்நிலையில் உடனே உங்கள் பிராவை மாற்றுங்கள்.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fashion For Health: Signs That Show You’re Wearing A Wrong Bra Right Now

Wrong Bra Size! Yes. There is a thing like that and you maybe suffering from that. Check out some bra signs to find if you are wearing your bra the correct way.
Story first published: Thursday, June 30, 2016, 15:39 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter