For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராணி முகர்ஜியின் ஐந்து மிகச்சிறந்த பார்டர் புடவைகள்!

By Aruna Saravanan
|

சமீபத்தில் தான் ராணி முகர்ஜி பெண் குழந்தையைப் பெற்றுள்ளார். அக்குழந்தைக்கு ஆதிரா என்ற பெயரை சூட்டியுள்ளார். டிவிட்டரில் இவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. கரன் ஜோக்கர், தான் மாமா ஆனதை கொண்டாடி மகிழ்கின்றார். ரிஷி கபூர் தம்பதிகளை வாழ்த்தியுள்ளார். இந்த மகிழ்ச்சியான புது தாய் தந்தையை நினைத்து நாமும் மகிழ்கின்றோம். ராணி முகர்ஜியைப் பற்றி பல செய்திகள் வரும் இவ்வேளையில் அவரின் அழகை எடுத்துக்காட்டும் புடவை டிசைனைப் பற்றி நாமும் எழுதி இந்த இனிய வேளையில் இவருக்கு சமர்பிப்போம்.

ராணி முகர்ஜி சினிமா உலகத்திலிருந்து ஒரு இடைவேளை எடுத்துள்ளார். இப்பொழுது குழந்தை பிறந்தவுடன் இவரை வெள்ளி திரையில் காண துடிக்கின்றோம். இவரைப் பற்றி கூறும் பொழுது இவருடைய புடவையின் அழகைப் பற்றி சிந்தித்து இருக்கின்றீர்களா. அவர் எப்படி புடவை உடுத்துகின்றார் என்பதை கூறுவதற்கு முன் பார்டர் கொண்ட புடவையை இவர் ரசித்து அணிவதைப் பற்றி இங்கு காண்போம்.

புடவைகளில் பல விதங்கள் இருந்தாலும் இவர் பார்டர் புடவைகளை அதிகம் விரும்புகின்றார். இவரிடமிருந்து புடவையைப் பற்றி பல செய்திகளை நாம் தெரிந்து கொள்ள முடியும். பொது இடங்களில் இவரை காணும் போது நிஜமாகவே நம் பார்வைக்கு விருந்தளிக்கின்றார். ராணியின் மிக சிறந்த பார்டர் புடவைகளை இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு நிற பார்டர் கொண்ட வெள்ளை நிற புடவை

சிவப்பு நிற பார்டர் கொண்ட வெள்ளை நிற புடவை

இதில் ராணி எந்த டிசைனும் இல்லாத வெள்ளை நிற புடவையை அணிந்துள்ளார். இதற்கு சிவப்பு நிறத்தில் பார்டர் உள்ளது. ஆனால் இதற்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத வகையில் கறுப்பு நிறத்தில் கையில்லா ப்ளவுசை அணிந்திருந்தாலும் அழகாக தான் இருக்கின்றது.

சிவப்பு மற்றும் தங்க நிறம் கலந்த பார்டர் கொண்ட வெள்ளை நிற புடவை

சிவப்பு மற்றும் தங்க நிறம் கலந்த பார்டர் கொண்ட வெள்ளை நிற புடவை

இந்த நிறங்களை சொன்னவுடனே புரிந்துவிடும் இந்த புடவை எவ்வளவு அழகு என்று. இந்த வெள்ளை நிற புடவை டிசைன் எதுவும் இல்லாமல் இருந்தாலும் இதன் பார்டர் இதற்கு கூடுதல் அழகைக் கொடுக்கின்றது.

சிவப்பு மற்றும் சில்வர் நிற கோட்டா பார்டர் புடவை

சிவப்பு மற்றும் சில்வர் நிற கோட்டா பார்டர் புடவை

இந்த புடவையில் சிவப்பு மற்றும் சில்வர் கோட்டாவின் கலவை மிகுதியான அழகை கொடுக்கும். இந்த கோட்டாவில் இருக்கும் சிவப்பு நிற வெல்வெட் லைனிங் மேலும் அழகூட்டுகின்றது.

தங்க நிற பார்டர் கொண்ட சிவப்பு நிற புடவை

தங்க நிற பார்டர் கொண்ட சிவப்பு நிற புடவை

இந்த சிவப்பு நிற நெட்டட் புடவையில் உள்ள ஹெம், புடவைக்கு கூடுதல் அழகை தருகின்றது. நல்ல கனமான இந்த ஹெம் டிசைன் நுணுக்கமான தங்க நிற நூலால் வடிவமைக்கப்பட்டது.

சிவப்பு நிற பார்டர் கொண்ட மஞ்சள் நிற புடவை

சிவப்பு நிற பார்டர் கொண்ட மஞ்சள் நிற புடவை

ராணி முகர்ஜி சிவப்பு நிறத்தில் பார்டர் கொண்ட மஞ்சள் நிற புடவையை உடுத்தியுள்ளார். முன்பு பார்த்த பார்டரை விட இது மெலிதாக இருக்கின்றது. இதில் கூடுதலாக வெள்ளி மற்றும் பச்சை பார்டர் மெல்லிய கோடு போல் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Best-Bordered Sarees Of Rani Mukerji

Rani Mukerji saree collection is here! Especially bordered sarees. Have a look at 5 best-bordered sarees of Rani and get tips for next saree shopping day.
Desktop Bottom Promotion