'சரப்ஜித்' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு பார்பி டால் போன்று வந்த ஐஸ்வர்யா ராய்!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த 'சரப்ஜித்' என்னும் பாலிவுட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு படத்தின் நாயகி நடிகை ஐஸ்வர்யா ராய் அற்புதமான உடையில் இளமை ததும்ப வந்தார்.

'சரப்ஜித்' ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா அணிந்து வந்த உடை, அவரது இளமைக் காலத்தை நமக்கு நினைவூட்டும் வண்ணம் இருந்தது. அந்த அளவில் அவர் இன்னும் சிக்கென்ற உடலமைப்பைப் பராமரித்து வருகிறார்.

இங்கு 'சரப்ஜித்' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு பார்பி டால் போன்று வந்த ஐஸ்வர்யா ராய் பச்சனின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

டிசைனர் ஆய்ஷா ரமதான்

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த பிங்க் நிற உடை, துபாய் டிசைனரான ஆய்ஷா ரமதான் வடிவமைத்ததாகும்.

ஐஸ் மேக்கப்

ஐஸ்வர்யா இந்த பிங்க் நிற உடைக்கு கன்னங்களுக்கு பிங்க் நிற ப்ளஷ் அடித்து, உதட்டிற்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் மட்டும் போட்டு சிம்பிளாக வந்திருந்தார்.

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்

ஐஸ்வர்யா ராய் இந்த அழகான கவுனிற்கு சைடு உச்சி எடுத்து ஸ்ட்ரைட்னிங் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தது அவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

ஆபரணங்கள்

ஐஸ்வர்யா இந்த பிங்க் நிற உடைக்கு காதுகளுக்கு சிறிய கம்மலைத் தவிர, வேறு எந்த ஒரு ஆபரணமும் அணியாமல் சிம்பிளாக வந்திருந்தார்.

படக்குழுவினருடன் ஐஸ்

இது 'சரப்ஜித்' ட்ரெய்லர் வெளியீட்டின் போது படக்குழுவினருடன் சேர்ந்து ஐஸ்வர்யா கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Aishwarya Rai Bachchan Chanels Her Inner Princess In An Aiisha Ramadan Dress

Sarabjit trailer launch Aishwarya Rai Bachchan looking beautiful in a bright pink dress. Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter