வெள்ளை நிற கோட்சூட்டில் பிரியங்கா சோப்ரா!!!

By: Babu
Subscribe to Boldsky

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தொடர்ந்து பல படங்களை நடித்து வருவதால், அவர் தன் படத்தை மக்களிடையே விளம்பரப்படுத்த மிகவும் பிஸியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அப்படி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது, பல அட்டகாசமான தோற்றத்தில் வந்து அசத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா 'மேரி கோம்' என்னும் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் தீவிரமாக இருந்தார்.

அதற்காக அவர் இந்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு வெள்ளை நிற கோட்சூட்டில் மிகவும் ஸ்டைலாக வந்திருந்தார். மேலும் அவர் அந்த கோட்சூட்டிற்கு மேற்கொண்ட ஸ்டைல் அற்புதமாக இருந்தது. சரி, இப்போது பிரியங்கா சோப்ரவின் அந்த ஸ்டைலைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அர்மானி சூட்டில் பிரியங்கா

இது தான் பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த வெள்ளை நிற அர்மானி கோட்சூட்.

கருப்பு டி-சர்ட்

பிரியங்கா வெள்ளை நிற கோட்சூட்டிற்கு கருப்பு நிற டி-சர்ட் அணிந்து வந்திருந்தது படு ஸ்டைலாக அவரை வெளிக்காட்டியது.

பிரியங்காவின் மேக்கப்

பிரியங்கா சோப்ரா அளவாக மேக்கப் போட்டு வந்திருந்தார்.

தங்க பிரேஸ்லெட்

வெள்ளை நிற கோட்சூட்டில் வந்த பிரியங்கா கைகளுக்கு தங்க பிரேஸ்லெட் அணிந்து வந்திருந்தார்.

தங்க காதணி

மேலும் காதுகளுக்கு ஸ்டைலான மற்றும் நீளமான தங்க காதணி அணிந்து வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

பிரியங்கா சோப்ரா கோட்சூட்டிற்கு மிகவும் சிம்பிளாக ஹேர் ஸ்டைலான குதிரைவால் போட்டு வந்திருந்தார்.

அழகான உதடுகள்

பிரியங்கா சோப்ராவிற்கு அழகே அவரது உதடுகள் தான். அந்த உதடுகளுக்கு அவர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்தது, அவரை சற்று ஹாட்டாக வெளிக்காட்டியது.

தங்க நிற ஷூ

பிரியங்கா சோப்ரா தங்க ஆபரணங்கள் அணிந்ததாலோ என்னவோ, கால்களுக்கு தங்க நிற ஷூ அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Priyanka Chopra In White Armani Suit

Priyanka Chopra was in a white Armani suit on the sets of Jhalak Dikhla Jaa. To know how Priyanka Chopra during Mary Kom promotions, read on..
Please Wait while comments are loading...
Subscribe Newsletter