For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குண்டா இருக்கீங்களா? ஒல்லியா காட்ட இதோ சில டிப்ஸ்...

By SATEESH KUMAR S
|

வசீகரிக்கும் உடலை பெற்றுள்ள பெண்கள் மட்டுமே ஸ்டைலாகவும், நவநாகரீகமாகவும் தோற்றமளிக்க முடியும் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் எண்ணத்தை உங்கள் எண்ணம் முற்றிலும் தவறானது. நீங்கள் ஆடை ஆபரணங்களை அணியும் விதம் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்.

சரியான ஆடையை தேர்வு செய்யும் திறனும், சாமர்த்தியமும் ஒல்லியாக தோற்றமளிக்க உதவும். உங்கள் தளர்ந்து போன தோற்றத்தை, மேம்படுத்தி அழகாக தோற்றமளிக்க வேண்டும் எண்ணம் கொண்டவர் நீங்கள் எனில் கீழே தரப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி பயன் பெறுங்கள்.

சரியான பொருத்தமான உடைகள் வாங்க வேண்டும்

மிகவும் இறுக்கமான ஆடைகளை நீங்கள் அணிந்தீர்கள் என்றால் அது உங்கள் உடலின் தளர்வான பாகத்தை பிராதனப்படுத்தி தோன்ற செய்யும். இத்தகைய உடைகள் சௌகரியமற்ற தன்மையை உங்களை உணர செய்யும். எனவே உங்களுக்கு பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்து அணிவது நல்லது. நீண்ட செங்குத்தான கோடுகளை கொண்ட நீண்ட ஆடைகளை தேர்வு செய்து அணிந்து அழகான தோற்றம் பெறுவதே சிறந்தது.

Effective Tips To Make You Look Slimmer

உடலின் கீழ் பகுதியை ஒல்லியாக தோன்ற செய்யும் ஆடைகள்

* மடிப்புகள் கொண்ட ஸ்கர்ட்டுக்களுக்கு பதிலாக கோடுகளை கொண்ட ஸ்கர்ட்டுக்களை தேர்வு செய்யுங்கள்.

* புடைத்து பெருத்துள்ள பாகங்களை மறைக்கும் பொருட்டு குறைந்த உயரத்துடன் கூடிய தளர்வான ஜீன்ஸ்களை தேர்வு செய்ய வேண்டும்.

* எளிமையான டிசைன்களை கொண்ட ஆனால் அதிக பாக்கெட்டுகள் இல்லாத பூட் கட் பேன்டுகளை அணிந்து உங்களது நீளமான இடுப்பினை சமநிலைப்படுத்தலாம்.

உடலின் மேல் பாகத்தை மெலிதாக தோன்ற செய்யும் ஆடை வகைகள்

* உங்கள் கைகள் அதிகம் கவனிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு நீங்கள் டேங்க் டாப்ஸ் அணிவதை குறிப்பாக கோடைகாலத்தில் அணிவதை தவிர்க்க வேண்டும்.

* நீங்கள் சிறந்த தோள்களை கொண்டவர் எனில் நீங்கள் போட்-நெக் டாப்ஸ் அணியலாம்.

* சிங்கிள் ஷேட் டார்க் நிற ஆடைகள் உடலின் சதைப்பற்றுள்ள பாகங்களை மறைக்கும். நேவி புளூ அல்லது கருப்பு நிறம் கொண்ட ஆடைகளை அணியுங்கள். ஷூக்கள்,நெக்லேஸ் மற்றும் ப்ரேஸ்லெட் ஆகியவற்றை கொண்டு டார்க் நிற ஆடைகளை மேலும் சிறப்புடையததாக்குங்கள்

நிலையில் கவனம் செலுத்துங்கள்

சிறப்பான நிலை உங்களை மெல்லியராக தோன்ற செய்யும்.நேராக நிமிர்ந்து நில்லுங்கள்.உங்கள் தோள்களை பின்னால் இழுத்து தலையை உயர்த்தி நிமிர்ர்ந்து நின்று உங்களது நிலையை சிறப்பானதாக்குங்கள்.நம்பிக்கை உடையவராக இருங்கள்.நீண்ட குத்திக்கால்கள் உங்கள் உருவத்திற்கு மெல்லிய தோற்றத்தை தரும்.எனவே ஜீன்ஸ் அணிந்து ஹீல்ஸ் உடன் மெல்லியத்தோற்றத்தை பெறுங்கள்.

உங்கள் சிறப்பம்சங்களை பிராதானப்படுத்துங்கள்

உங்கள் மற்ற உடல் பாகங்களில் கவனம் செல்வதை தவிர்க்கும் பொருட்டு உங்களின் அற்புதமான சிறப்பம்சங்களை பிரதானப்படுத்துங்கள்.உங்கள் அழகான முகம் ,மெல்லிய கழுத்து உடலின் மேல்பகுதி ஆகியவற்றை ஆபரணங்களினால் அலங்கரித்து மற்றவரை மந்திரத்தால் கட்டுண்டவராக்குங்கள்.

சரியான ஆடை வகையை தேர்வு செய்யுங்கள்

டாப்ஸ்கள், பேண்ட்கள், ஸ்கர்ட்கள் மற்றும் பிற உடை வகைகளிலும் பெரிய வகை உடையை தேர்வு செய்யாதீர்கள். ஏனெனில் அவை உங்களை உடல் பருத்தவராக தோன்ற செய்யும். சிறிய வகை ஆடைகளில் எளிமையான ப்ரிண்ட்டுகள் கொண்ட உடைகள் உங்களை நேர்த்தியானவராகவும் அழகான தோற்றம் கொண்டவராகவும் காட்டும்.

சிறந்த துணி வகைகளை தேர்வு செய்யுங்கள்

நீங்கள் உங்கள் தளர்வான உடல் பாகங்களை மறைக்க விரும்புவரெனில் உங்கள் உடலோடு ஒட்டும் தன்மை கொண்ட ஆடைகளை அணிவதை தவிர்த்திடுங்கள். காட்டன் துணிவகைகள் அல்லது உங்களை ஒல்லியான தோற்றம் பெற செய்யும் மற்ற பிற ஆடை வகைகளை தேர்வு செய்யுங்கள். பளபளப்பானதும் உங்கள் உடலோடு ஒட்டி கொள்வதுமான ஆடை வகைகளை உங்கள் வார்ட்ரோபிலிருந்து அகற்றுங்கள்.

English summary

Effective Tips To Make You Look Slimmer

If you think that only those women who have impressive figure can look trendy and stylish, you are completely wrong! The way you wear the dress and accessorize, it makes a big difference. A little dexterity and the right clothing sense can help you to create the illusion of appearing slimmer.
Story first published: Saturday, April 5, 2014, 15:23 [IST]
Desktop Bottom Promotion