For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் வெளிவந்த தருன் தெஹலியானி கலெக்ஷன்கள்!!!

By Maha
|

இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் ஜோஸ்னா திவாரி கலெக்ஷன்கள் மட்டுமின்றி, ஏஸ் ஃபேஷன் டிசைனரான தருன் தெஹலியானியின் கலெக்ஷன்களும் வெளிவந்தன. இவரது கலெக்ஷன்களில் நல்ல பிரகாசமான நிறங்களுடன், அழகான வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி இவர் பாரம்பரிய தோற்றத்தைக் கொடுக்கும் வகையிலான பல்வேறு ஸ்டைலான ஆடைகளை வடிவமைத்தார்.

அதிலும் இவர் வடிவமைத்த லெஹெங்கா ஆடைகளை அனைத்தும் மிகவும் கிராண்ட் லுக்கைத் கொடுக்கும் வகையில் தான் இருந்தது. மேலும் இவர் தனது ஆடைகளை வெளியிட எந்த ஒரு ஷோஸ்டாப்பரையும் அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் தருன் தெஹலியானி வடிவமைத்து வெளியிட்ட ஆடைகள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோல்டன் கவுன் மற்றும் அனார்கலி

கோல்டன் கவுன் மற்றும் அனார்கலி

இந்த முறை பிரைடல் கலெக்ஷன்களில் தருன் பெரும்பாலும் கோல்டன் நிற ஆடைகளை வெளியிட்டார்.

கோல்டன் புடவை

கோல்டன் புடவை

தருன் வடிவமைத்த ஆடைகளில் கோல்டன் புடவையும் ஒன்று. ஆனால் ஏற்கனவே விருது விழா ஒன்றில் ஸ்ரேயா அணிந்து வந்த ஜாக்கெட் மாடலிலேயே, இந்த புடவைக்கும் ஜாக்கெட்டை வடிவமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளிரிய பழுப்பு நிற உடை

வெளிரிய பழுப்பு நிற உடை

தருன் வெளிரிய பழுப்பு நிற லேஸ் உடையை வடிவமைத்திருப்பதோடு, அந்த உடைகளில் அதிகப்படியான வேலைப்பாடுகளை செய்து, உடையின் அழகையே அதிகரித்து வெளியிட்டார்.

பச்சை

பச்சை

வெறும் கோல்டன் நிறங்களில் மட்டுமின்றி, பச்சை நிறங்களிலும் ப்ரில் ஸ்கர்ட், கவுன் மற்றும் புடவைகளை வெளியிட்டார்.

சிவப்பு கலந்த லெஹெங்காக்கள்

சிவப்பு கலந்த லெஹெங்காக்கள்

அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சிவப்பு நிறம் கலந்த பல்வேறு லெஹெங்காக்களையும் தருன் வடிவமைத்து வெளியிட்டார்.

துப்பாட்டா

துப்பாட்டா

லெஹெங்காக்கள் மட்டுமின்றி, தருன் பல்வேறு முனைகளில் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஷீர் துப்பட்டாக்களையும் வடிவமைத்திருந்தார்.

மணமகள் உடை

மணமகள் உடை

தருன் வெளியிட்ட உடைகளிலேயே சந்தன நிற லெஹெங்கா, அனார்கலி மற்றும் புடவை தான் சூப்பராக இருந்தது.

பூப்போட்ட பிரிண்ட்

பூப்போட்ட பிரிண்ட்

தருன் கலெக்ஷன்களில் பூப்போட் எம்பிராய்டரி மற்றும் பிரிண்ட் உடைகள் கூட அடங்கும்.

பிங்க்

பிங்க்

இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் பிங்க் நிற சில்க் மற்றும் நெட்டட் உடைகளையும் தருன் வெளியிட்டார்.

குங்குமப்பூ நிறம்

குங்குமப்பூ நிறம்

மங்களகரமான தோற்றத்தைக் கொடுக்கும் நிறமான குங்குமப்பூ நிறங்களில் கூட ஆடைகளை வெளியிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

IBFW 2013: Tarun Tahiliani's Collection

Tarun Tahiliani's bridal collection at IBFW 2013 ramp showcased some traditional as well as some modern bridal wear. From ethnic lehengas to slit silhouettes, Tarun made sure he catered to all types of women.
Story first published: Saturday, November 30, 2013, 13:56 [IST]
Desktop Bottom Promotion