For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

இங்கு முகத்தில் பருக்கள் வராமல் இருக்க தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

முகத்தில் உள்ள ஓரிரு பருக்களை மேக்கப் மூலம் மறைத்துக் கொள்ளலாம். ஆனால் முகத்தில் பருக்கள் அதிகமான அளவில் இருந்தால், அதை முற்றிலும் மறைக்க முடியாது. முகத்தில் பருக்கள் அதிகம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று நமது ஒருசில தவறான பழக்கவழக்கங்கள் தான்.

Things You Must Do Without Fail To Get Rid Of Acne!

அப்பழக்கங்களை மாற்றி, பருக்களை வரவிடாமல் செய்யும் பழக்கங்களைக் கொண்டால், முக அழகைப் பாதுகாக்கலாம். சரி, இப்போது முகத்தில் பருக்கள் வராமல் இருக்க பின்பற்ற வேண்டிய சில விஷயங்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயல் #1

செயல் #1

முகத்தை ஒரு நாளைக்கு 2 முறை மைல்டு கிளின்சர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக கிளின்சர் பயன்படுத்தும் போது, அளவுக்கு அதிகமாக தேய்க்க வேண்டாம்.

செயல் #2

செயல் #2

சிலர் முகத்தில் உள்ள பருக்களை கையால் பிய்த்து எறிவார்கள். ஆனால் இப்படி பிய்த்து எறிவதன் மூலம், பருக்கள் இருந்த இடம் காயம் ஆவதோடு, நிலைமை இன்னும் மோசமாகக்கூடும். எனவே பருக்கள் அதிகம் இருக்கும் போது, பென்சோயின் பெராக்ஸைடு அல்லது சாலிசிலிக் அமிலம் கொண்டு முகத்தைக் கழுவுங்கள். இதனால் சருமத்தின் pH அளவு நிலையாக இருக்கும்.

செயல் #3

செயல் #3

சூரியனிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும். அதற்கு அடிக்கடி சருமத்திற்கு மாஸ்க் போடுவதோடு, வெளியே செல்லும் முன் சன் ஸ்க்ரீன் லோசனைத் தடவ வேண்டும்.

செயல் #4

செயல் #4

உடற்பயிற்சி செய்த பின் முகத்தை நீரால் கழுவ வேண்டும். ஏனெனில் வியர்வை சருமத் துளைகளை அடைத்து முகப்பருவின் நிலைமையை இன்னும் மோசமாக்கும். எனவே எப்போதும் வெளியே சென்று வீட்டிற்கு வந்த பின், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

செயல் #5

செயல் #5

தலைக்கு ஹேர் ஸ்ப்ரே அல்லது ஹேர் ஜெல்லைப் பயன்படுத்தினால், தலைமுடி முகத்தில் விழாதவாறு பார்த்துக் கொள்ளவும். பெரும்பாலான தலைமுடி பராமரிப்பு பொருட்களில் எண்ணெய் அதிகம் உள்ளது. இது பருக்களை மோசமாக்கும்.

செயல் #6

செயல் #6

உங்களுக்கு மார்பு அல்லது முதுகுப் பகுதிகளில் பருக்கள் அதிகம் இருந்தால், இறுக்கமான உடைகளை அணிவதைத் தவிர்த்திடுங்கள். ஏணெனில் இது அரிப்பையும், எரிச்சலையும் உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Must Do Without Fail To Get Rid Of Acne!

Here are some things you must do without fail to get rid of acne.
Story first published: Tuesday, January 3, 2017, 15:48 [IST]
Desktop Bottom Promotion