For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபேர்னஸ் க்ரீம் உபயோகிச்சா உண்டாகும் ஆபத்துகள் பற்றி தெரியுமா?

ஃபேர்னஸ் க்ரீம்கள் உபயியோகிப்பதால் உண்டாகும் பக்க விளைவ்களை சரும மருத்துவர் ரிஷி பராஷர் என்பவர் கூறுகிறார். படித்து பயன்பெறுங்கள்

By Peveena Murugesan
|

சில நாட்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் அழகு சம்பந்தப்பட்ட கிரீம்கள் பற்றியும் அவற்றின் அபத்தமான பொய்களை பற்றியும் அது இந்தியா மற்றும் பல அண்டை நாடுகளை சுற்றியும் வளம் வருவதை பற்றியும் பேட்டி எடுத்தனர்.அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரும மருத்துவர் ரிஷி பராஷர் கூறிய பதிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகு க்ரீம்கள் நிரந்த நிறத்தை தருமா?

அழகு க்ரீம்கள் நிரந்த நிறத்தை தருமா?

தோலின் நிறமானது மெலனின் வகை மற்றும் அளவு,தோல் நிறமியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.தோலின் நிறம் சுற்றுப்புற சூழலை விட மரபணு சார்ந்தே மாறுகின்றது.

இந்த அழகு சம்பந்தப்பட்ட அனைத்து கிரீம்களும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி தோலை சேதப்படுத்துவதுடன் இயற்கையாக தோலின் நிறம் அதிகரிப்பதை தடுக்கும்.காலம் மற்றும் சில அறிவியல் சம்பந்தப்பட்ட இதழ்கள் நிரூபித்துள்ளது "இந்த கிரீம்கள் நிஜத்தில் அழகையோ,நிறத்தையோ தருவதில்லை" என்று.

இந்த கிரீம்கள் தோலை அதிக சூரிய ஒளியினால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாத்து பராமரிக்கின்றது.தோலை வெளுப்பாக்கக் கூடிய ரசாயனம் ஹைட்ரொகுவினோன் கொண்டுள்ளது என்றும் இவை தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்களை கொண்டுள்ளது என்றும் நிரூபித்துள்ளது.

 எதன் அடிப்படியில் இந்த க்ரீம்களை விளம்பரப்படுத்திகிறார்கள்

எதன் அடிப்படியில் இந்த க்ரீம்களை விளம்பரப்படுத்திகிறார்கள்

பெரும்பாலும் பலர் இருக்கும் இடத்தை பொறுத்தே இந்த கிரீம்கள் அதிகம் விற்பனையாகிறது.சிலர் இந்த கிரீம்களை பற்றிய அறிவுடன் இருந்தாலும் அழகை அதிகப்படுத்த நினைக்கும் ஆசையில் காதுகளை மூடி கொண்டு உபயோகப்படுத்துகின்றனர்.

எனவே என்னிடம் வரும் நோயாளிகளுக்கு அழகு என்பது நிறத்தை பொறுத்து இல்லை என்று கூறி வருகின்றேன்.

 மயக்கும் வகையில் வித்தை :

மயக்கும் வகையில் வித்தை :

இந்தியாவில் அழகு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றிருப்பவர்கள் அனைவருமே மிகவும் உயரமாக,மெலிந்த உடல்வாகு,தேன் நிறமுள்ள தோல் இவற்றுடன் தான் இருந்திருக்கின்றனர்.பெரும்பாலான விளம்பரங்கள் மக்களின் ஆசையை தூண்டும் விதமாகவே அமைந்துள்ளன.இந்த கிரீம்கள் அதிகம் விற்கப்படுகின்றன.

அதிகமாக விற்கப்படும் நாடுகள் :

அதிகமாக விற்கப்படும் நாடுகள் :

முக்கிய நகரங்கள்:இந்தியா-பெரிய சந்தையாக உள்ளது.சவூதி அரேபியா,வளைகுடா நாடுகள்,ஆப்பிரிக்கா,மலேசியா,தாய்லாந்து,தூர கிழக்கு நாடுகள்.

பொதுவாக இந்த விளம்பரங்கள் எதிர் பாலினத்தவரை ஈர்க்கும் வகையிலும்,சிறந்த மணப்பெண்/மணமகன் பெறுவதாகவும்,நல்ல வேலைக் கிடைப்பதாகவும் காட்டப்படுகின்றன மற்றும் இந்த விளம்பரங்கள் விளம்பரப்பலகை,பத்திரிகைகள்,செய்தித்தாள்,தொலைக்காட்சி,வானொலி என அனைத்திலும் ஒளிபரப்பப்படுகின்றன.

இவ்வாறு செய்து அந்த கிரீம்களை பற்றிய ஒரு எதிர்பார்ப்பினை மக்களிடத்தில் உருவாக்குகின்றனர்.

நிறமூட்டும் க்ரீம்களில் ப்ளீச் கலக்கப்படுகிறதா?

நிறமூட்டும் க்ரீம்களில் ப்ளீச் கலக்கப்படுகிறதா?

கிரீம்களில் கலந்துள்ள பொருட்கள்:ஹைட்ரொகுவினோன்-இது தோலை வெண்மையாக்க பயன்படுத்தப்படுகிறது.இது தோலிற்கு அதிக எரிச்சலை ஏற்படுத்தும். கோஜிக் அமிலம்-இது 1 சதவிகிதத்திற்கும் குறைவாக சேர்க்கப்படுகிறது.

தோலில் மெலனின் உற்பத்தியை தடுக்கும் வைட்டமின் சி வகையை சார்ந்த குணம் கொண்டது.ரெட்டினோயிக் அமிலம்-வைட்டமின் ஏ வகையை சார்ந்த தோலின் மேற்பரப்பு படலங்களை அகற்ற உதவும். இதன்மூலம் தோலின் அடர் நிற செல்கள் நீக்கப்படும்.

 எப்படி செயல்படுகிறது?

எப்படி செயல்படுகிறது?

இந்த செயல்பாட்டில் தோலின் கீழே உள்ள நிறமி செல்கள் மேலே வருகின்றன.ப்ளாக்பெர்ரி,மல்பெர்ரி,திராட்சை இவற்றின் சாறுகள் தோலை சற்றே கொஞ்சமாக வெண்மையாக்கும்.

ஸ்டீராய்டுகள்,மெர்க்குரி உப்புகள்,பிஸ்மத்(ஒரு வகை உலோகம்) ஹைட்ரஜன் பெராக்சைடு,மெக்னீசியம் பெராக்சைடு,வைட்டமின் பி3 அமெரிக்க FDA மற்றும் ஐரோப்பிய ஒன்றியும் அங்கீகரித்த புற ஊதா எ மற்றும் பி கலந்த கலவை.

இவை அனைத்தும் கிரீம்களில் இருக்கும்.அனைத்து கிரீம்களில் 2 முதல் 4% ஹைட்ரொகுவினோன் இருக்கும் இதை தினமும் உபயோகித்தால் தோல் மிகவும் உணர்ச்சி மிக்கதாக மாறிவிடும்.

இந்த கிரீம்கள் மெலனின் உற்பத்தியைத் தடுக்கிறது. இந்த கிரீம்கள் உபயோகிக்காமல் நிறுத்தினால் தோல் பழைய நிறத்திற்கோ (அ) இன்னும் அடர்ந்த நிறத்திற்கோ மாறிவிடும்.

பக்கவிளைவுகள் :

பக்கவிளைவுகள் :

மேலும் இந்த கிரீம்கள் முகத்தில் சமமாக பயன்படுத்தப்படுவதில்லை இதனால் சீரற்ற நிறத்துடனும் புள்ளிகளுடனும் காணப்படும்.சில கிரீம்களில் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் தீவிரமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

மெர்க்குரி நச்சுத்தன்மை-அதிக தாகம்,வயிற்று வலி,ரத்தம் தோய்ந்த வயிற்றுப்போக்கு,பெருங்குடல் அலர்ஜி,மலச்சிக்கல்,நடுக்கம்,ரத்தசோகை,தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

40% கிரீம் உபயோகித்தவர்கள் முகத்தில் முடி,வலி,முகப்பரு,தோல் சுருக்கம்,வெடிப்பு,அலர்ஜி,போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர். இவை பெரும்பாலும் தோல் புற்றுநோய்,சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Selling fairness in India an Unfair game! Experts revealed!!

Selling fairness in India an Unfair game! Experts revealed!!
Story first published: Saturday, April 22, 2017, 15:25 [IST]
Desktop Bottom Promotion