For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் கருப்பாகாமல் இருக்க வேண்டுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கைப் போடுங்க...

இங்கு கோடையில் கருப்பாகாமல் இருக்க உதவும் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

உங்களுக்கு வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை உள்ளதா? இதற்காக சரும நிறத்தை அதிகரிக்கும் க்ரீம்களை வாங்கி தினமும் உபயோகிக்கிறீர்களா? அதோடு மாதம் ஒருமுறை தவறாமல் அழகு நிலையங்களுக்கு சென்று பாக்கெட்டில் உள்ள பணத்தை வீணாக்குகிறீர்களா?

How To Get Whitening And Glowing Skin With Homemade Face Packs

என்ன தான் செயற்கை வழிகளின் மூலம் பலனைப் பெற நினைத்தாலும், அது தற்காலிகமாகத் தான் இருக்கும். ஆனால் இயற்கை பொருட்களைக் கொண்டு பேஸ் பேக் போடுவதன் மூலம், சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதோடு, சரும செல்களையும் ஆரோக்கியமாக வைத்து, சரும பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம்.

இங்கு சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் பயன்படுத்தி வந்தால், நிச்சயம் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசி மாவு, தேன்

அரிசி மாவு, தேன்

1/2 டேபிள் ஸ்பூன் தேனை 1 கப் தேநீருடன் கலந்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, நன்கு காய்ந்த பின் நீரால் மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள், அழக்குகள் போன்றவை முழுமையாக நீக்கப்பட்டு, சரும நிறம் மேம்பட்டு காணப்படும்.

மஞ்சள் ஃபேஸ் பேக்

மஞ்சள் ஃபேஸ் பேக்

2 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், சரும நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

பால் மற்றும் தேன்

பால் மற்றும் தேன்

1 டேபிள் ஸ்பூன் பால் அல்லது பால் பவுடருடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தயிர் மற்றும் ஓட்ஸ்

தயிர் மற்றும் ஓட்ஸ்

1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறிவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை அரைத்து, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இல்லாவிட்டால், உருளைக்கிழங்கு சாற்றுடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவினால், அது ப்ளீச் செய்த பலனைக் கொடுக்கும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், இரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பொலிவோடு இருக்கும். மற்றொரு வழி பாதாமை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை அரைத்து மோர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

புதினா ஃபேஸ் பேக்

புதினா ஃபேஸ் பேக்

புதினா இலைகளை அரைத்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் சுத்தமாவதோடு, சருமத்தில் உள்ள கருமையும் நீங்கி, சரும நிறம் மேம்படும்.

வாழைப்பழ ஃபேஸ் பேக்

வாழைப்பழ ஃபேஸ் பேக்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை கையால் மசித்து, அத்துடன் சிறிது தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் பிரகாசமாக இருக்கும்.

சந்தன ஃபேஸ் பேக்

சந்தன ஃபேஸ் பேக்

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சந்தனப் பொடியை நீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் உடனடி பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Whitening And Glowing Skin With Homemade Face Packs

Here we have collected a bunch of the best homemade face packs for skin whitening. These packs are also effective to give brighter and glowing skin.
Story first published: Tuesday, April 11, 2017, 11:15 [IST]
Desktop Bottom Promotion