பித்த வெடிப்பு அசிங்கமா தெரியுதா? இப்படி செஞ்சு பாருங்க!!

பாத வெடிப்பை அழகை கெடுக்கும் வகையில் இருக்கும். விரைவில் பாத வெடிப்பை மறையச் செய்யும் சில முக்கிய இயற்கை வைத்தியங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.

Subscribe to Boldsky

ஒருவரின் அழகை கெடுப்பதற்கு பாதத்தில் உண்டாகும் வெடிப்பு போதுமானது. க்ரீம் போட்டு நிரந்தரமாக போகாது. அவ்வப்போது பராமரிப்பு அதர வேண்டும்.

அதிகப்படியான உடல் சூடும் வெடிப்பை அதிகப்படுத்தும். வெடிப்பை போக்க இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள். பயனளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

நன்னாரி :

நன்னாரிவேர் 10 கிராம் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பாதியாக குறையும்போது அதனை வடிகட்டி வைக்கவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் வெடிப்பு மறையும்.

கரிசலாங்கண்ணி :

வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.

பப்பாளி பழம் :

பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தேயுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். காலை மாலை தினமும் செய்துவந்தால் பாதங்கள் மிருதுவாகும். வெடிப்பும் மறையும்.

உருளைக் கிழங்கு :

உருளைக்கிழங்கை அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தால் வெடிப்பு மறைந்து, வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

வெங்காயம் :

வெங்காயத்தை வதக்கி அரைத்துக் கொள்ளுங்கள். இதனை கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to get rid of heelcrack

Home remedies to get rid of heelcrack
Please Wait while comments are loading...
Subscribe Newsletter