For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரம் ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்துவிடும்!

இங்கு சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் ஃபேஸ் பேக்குகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

குறிப்பிட்ட வயதிற்கு பின், சருமம் சுருங்க ஆரம்பிக்கும் மற்றும் சரும துளைகள் விரிவடைய ஆரம்பிக்கும். இம்மாதிரியான நேரத்தில் சருமத்தை இறுக்கும் செயல்பாடுகளில் இறங்க வேண்டும். இதனால் சருமத் துளைகள் சுருங்க ஆரம்பிப்பதுடன், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்கள் மறையும்.

Homemade Skin Tightening Masks You Should Definitely Try At Least Once

அதற்கு சருமத்திற்கு அடிக்கடி ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகளை வாரத்திற்கு ஒருமுறை தவறாமல் போட்டு வந்தால், சரும சுருக்கங்கள் மறைந்து முதுமைத் தோற்றத்தைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபேஸ் பேக் #1

ஃபேஸ் பேக் #1

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்

பப்பாளி - சிறிது

தேன் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

பப்பாளியை நன்கு மசித்து, அத்துடன் அரிசி மாவு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக் #2

ஃபேஸ் பேக் #2

தேவையான பொருட்கள்:

ப்ளூபெர்ரி - 1 கையளவு

தேன் - சிறிது

செய்முறை:

செய்முறை:

ப்ளூபெர்ரியை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் தேனை முகத்தில் தடவி, அடுத்து ப்ளூபெர்ரி பேஸ்ட்டை முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக் #3

ஃபேஸ் பேக் #3

தேவையான பொருட்கள்:

முட்டை - 1

கற்றாழை ஜெல் - சிறிது

செய்முறை:

செய்முறை:

முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் தனியாக எடுத்து, அத்துடன் சிறிது கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் மேல் நோக்கியவாறு தடவ வேண்டும். பின்பு நன்கு உலர்ந்த பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.

ஃபேஸ் பேக் #4

ஃபேஸ் பேக் #4

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 1

மில்க் க்ரீம் - சிறிது

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் - 1

செய்முறை:

செய்முறை:

ஒரு பௌலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துப் போட்டு, அத்துடன் சிறது மில்க் க்ரீம் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக் #5

ஃபேஸ் பேக் #5

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - சிறிது

முட்டை வெள்ளைக்கரு - 1

எலுமிச்சை சாறு - சிறிது

செய்முறை:

செய்முறை:

முதலில் வெள்ளரிக்காயை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Skin Tightening Masks You Should Definitely Try At Least Once

Homemade skin tightening masks you should definitely try at least once. Read on to know more...
Desktop Bottom Promotion