For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தகதகன்னு நீங்க ஜொலிக்கனுமா? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!!

அருமையான சருமம் பெற நீங்கள் செய்ய வேண்டிய குறிப்புகள் மற்றும் பளிச்சென்ற தோற்றம் பெற நீங்கள் செய்ய வேண்டிய அழகுக் குறிப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

|

முகத்தில் அழுக்கு, வியர்வை தூசு போன்றவை உங்கல் சருமத்தை ஆக்கிரமிச்சு முகப் பொலிவை குறைத்துவிடும். என்னதான் மெக்கப் போட்டு மறைச்சலும் மேக்கப்பில்லாமல் களையற்ற முகம் பல்லிளிக்கும்.

Homemade beauty tips to get flawless skin

பளிச்சின்னு தோற்றம் பெற யாருக்குதான் ஆசை இருக்காது. இதோ உங்களுக்கான அருமையான குறிப்புகள். உடனடியாக பலன் கிடைக்கும். முயற்சித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்கறி சாறு :

காய்கறி சாறு :

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும்.

பொலிவான முகம் :

பொலிவான முகம் :

ஒரு கேரட்டை எடுத்துக்கொண்டு, அதை நன்றாக கூழ்போல் அரைத்து, உங்கள் முகத்தில், அந்த கூழை நன்றாக தடவிக்கொள்ளுங்கள்.நன்கு ஊறிய பிறகு சிறிது நேரம் நன்றாக ஊறவிட்டு முகத்தை கழுவுங்கள். உங்கள் முகம் இப்பொழுது புதுப்பொலிவுடன், வழவழப்புத் தன்மையைப் பெற்றிருக்கும்.

 மூலிகை தைலம் :

மூலிகை தைலம் :

ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.

 கருமை போக :

கருமை போக :

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.

முழங்கை கருமை மறைய :

முழங்கை கருமை மறைய :

முழங்கால்களில், முழங்கைகளில் உள்ள கறுப்பு நிறம் என்பது பெரும்பாலானவர்களுக்கு இருக்க கூடியதே.

இந்த முழங்கால், முழங்கையில் உள்ள கருப்பு நிறத்தை போக்க ஆலிவ் எண்ணெயும், பன்னீரும் கலந்த கலவையை தடவினால் நாளடைவில் கரிய நிறம் மறைந்து மற்ற இடங்களில் உள்ளதைப்போன்ற தோலின் நிறத்தைப் பெற முடியும்.

வாழைத்தண்டு கால்கள் :

வாழைத்தண்டு கால்கள் :

பாதத்தின் இறுகிய தன்மையைப் போக்கவும், பார்ப்பதற்கு நல்லதொரு வழவழப்பான தன்மையைப் பெறவும் பாதாம் எண்ணையை உங்கள் பாதங்களில் தடவி வர விரைவில் வாழைத்தண்டு கால் அழகைப் பெறுவீர்கள். பாதமும் நல்ல மென்மையான தோற்றத்தைப் பெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade beauty tips to get flawless skin

Homemade beauty tips to get flawless skin
Story first published: Tuesday, March 14, 2017, 10:46 [IST]
Desktop Bottom Promotion