For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! கோடை வெயிலால் கருப்பாகாமல் இருக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க...

இங்கு கோடையில் சருமம் கருமையாகாமல் தடுக்கும் சில ஃபேஸ் ஸ்கரப்புகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

கோடைக்காலம் வந்தாலே, கொளுத்தும் வெயிலில் சுற்றி பலரும் அடையாளம் தெரியாத அளவில் கருப்பாக மாறிவிடுவோம். அதோடு சருமத்தில் இறந்த செல்களின் அளவு அதிகரித்து, முகப் பொலிவை இழந்து அசிங்கமாக இருப்போம். இதனைத் தவிர்க்க கோடையில் சருமத்திற்கு தினமும் தவறாமல் பராமரிப்பு கொடுக்க வேண்டியது அவசியம்.

DIY Homemade Scrubs For Healthy And Glowing Skin In Summer Days

குறிப்பாக சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டு ஸ்கரப் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். இங்கு கோடையில் சருமம் கருமையாகாமல் தடுக்கும் சில ஃபேஸ் ஸ்கரப்புகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய் - சர்க்கரை

தேங்காய் எண்ணெய் - சர்க்கரை

ஒரு பௌலில் சிறிது சர்க்கரையுடன், 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, வெயிலால் சருமம் வறட்சியடைவது தடுக்கப்படும்.

ஓட்ஸ் - தயிர்

ஓட்ஸ் - தயிர்

1 சிறிய கப் ஓட்ஸ் பொடியுடன், தயிர், மஞ்சள் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீங்குவதோடு, முகத்தில் உள்ள மேடு பள்ளங்களும் மறைய ஆரம்பிக்கும்.

காபி - பாதாம் எண்ணெய்

காபி - பாதாம் எண்ணெய்

காபி பொடியுடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, பின்பு குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

அரிசி மாவு - தேன்

அரிசி மாவு - தேன்

அரிசி மாவை தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், இறந்த செல்கள் நீங்குவதோடு, முகப் பொலிவும் அதிகரிக்கும்.

டூத் பேஸ்ட் - உப்பு

டூத் பேஸ்ட் - உப்பு

டூத் பேஸ்ட்டுடன் சிறிது உப்பு மற்றும் 1/2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் வெயிலால் பருக்கள் வருவது தடுக்கப்படும்.

பப்பாளி - சர்க்கரை

பப்பாளி - சர்க்கரை

பப்பாளியை அரைத்து, அத்துடன் சிறிது சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் காலை, மாலை என இருவேளை செய்து வந்தால், முகம் பிரகாசமாக இருக்கும்.

மயோனைஸ் - மஞ்சள்

மயோனைஸ் - மஞ்சள்

மயோனைஸ் உடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கோடையில் சருமம் கருமையாவதைத் தடுக்கலாம்.

கற்றாழை

கற்றாழை

தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

DIY Homemade Scrubs For Healthy And Glowing Skin In Summer Days

Take a look at these homemade scrubs for glowing skin in summer and you could flaunt your flawless skin with the help of these easy homemade scrubs for healthy and glowing skin.
Desktop Bottom Promotion