For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில டிப்ஸ்...

இங்கு முகத்தில் உள்ள சீழ் நிறைந்த பருக்களைப் போக்க உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

முகத்தில் வெள்ளை நிறத்தில் சீழ் நிறைந்து அசிங்கமாக உள்ளதா? ஒருவரது முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, அதிகமான மேக்கப், தூசிகள் மற்றும் அழுக்குகளால் சருமத் துளைகள் அடைப்பது, மரபணு காரணங்கள், சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்தல், ஹார்மோன் மாற்றங்கள், அதிகமாக வெயிலில் சுற்றுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

Best Home Remedies To Treat Oil Bumps On The Face

இக்கட்டுரையில் முகத்தில் உள்ள சீழ் நிறைந்த பருக்களைப் போக்க உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, உங்கள் முகத்தை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன்

தேன்

தினமும் சீழ் நிறைந்த பருக்களின் மீது சிறிது தேனைத் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அடைப்புக்கள் நீங்கி, சருமத்துளைகள் சுத்தமாகும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயை சிறிது வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஒருவேளை விளக்கெண்ணெய் சற்று அடர்த்தியாக இருப்பது போல் இருந்தால், ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றினால், முகம் பருக்களின்றி பிரகாசமாக இருப்பதைக் காணலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை வட்ட துண்டுகளாக்கி, ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின் அதை எடுத்து முகத்தை மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்துக் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், உருளைக்கிழங்கு சாற்றினை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் பருக்கள் நீங்கி, முகம் அழகாக இருக்கும்.

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயிலை பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தில் பருக்களின் மீது தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வன் மூலம் சீழ் நிறைந்த பருக்கள் உலர்ந்து உதிர்ந்து விடும்.

வெந்தயக் கீரை

வெந்தயக் கீரை

வெந்தயக் கீரையை சிறிது எடுத்து அரைத்து, அத்துடன் தயிரை சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

சந்தனப் பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர்

சந்தனப் பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர்

சந்தனப் பவுடரை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பருக்களும் மறைந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Home Remedies To Treat Oil Bumps On The Face

Check out for some of the best home remedies to treat oily bumps on the face.
Story first published: Tuesday, March 28, 2017, 14:25 [IST]
Desktop Bottom Promotion