For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகப்பரு, சரும கருமை, வறட்சி என அனைத்திற்கும் விரைவில் தீர்வு காண வேண்டுமா?

இங்கு பப்பாளி மற்றும் தேனை சருமத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

|

அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கும் ஓர் பொருள் தான் பப்பாளி. இந்த பப்பாளியில் வைட்டமின் ஏ, கரோட்டினாய்டு, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் உள்ளது. இந்த பழத்தை சாப்பிட மட்டுமின்றி, அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தலாம்.

Benefits Of Using Papaya And Honey On Skin

அதிலும் பப்பாளியுடன் மருத்துவம் நிறைந்த தேனையும் சேர்த்து சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், பல்வேறு சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இப்போது பப்பாளி மற்றும் தேனை சருமத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளியின் அழகு நன்மைகள்!

பப்பாளியின் அழகு நன்மைகள்!

வறட்சியைத் தடுக்கும்

சரும வறட்சியால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள் பப்பாளியைக் கொண்டு தினமும் சருமத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் ஈரப்பசை தக்கவைக்கப்பட்டு, சரும வறட்சி நீங்கும்.

முதுமையைத் தடுக்கும்

முதுமையைத் தடுக்கும்

பப்பாளியை அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கம் நீங்கி, முதுமையைத் தள்ளிப் போடலாம்.

பருக்கள் குறையும்

பருக்கள் குறையும்

பருக்களால் அதிகம் அவஸ்தைப்பட்டு வந்தால், பப்பாளி காயின் சாற்றினை தினமும் தடவி வந்தால், பருக்கள் வேகமாக மறைந்துவிடும். இதற்கு பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப் பொருள் தான் காரணம்.

கருமை நீங்கும்

கருமை நீங்கும்

வெயிலில் சுற்றி சருமம் கருமையாகிவிட்டதா? அப்படியெனில் பப்பாளியை அரைத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் கருமை நீங்கும்.

முகத்தில் உள்ள முடிகள் நீங்கும்

முகத்தில் உள்ள முடிகள் நீங்கும்

பெண்களே முகத்தில் அதிகமாக முடி உள்ளதா? அப்படியெனில் பப்பாளி, தேன் மற்றும் முல்தானி மெட்டி கொண்டு வாரத்திற்கு 3 முறை மாஸ்க் போடுங்கள். இதனால் சீக்கிரம் முகத்தில் உள்ள முடி உதிர்ந்துவிடும்.

தேனின் அழகு நன்மைகள்!

தேனின் அழகு நன்மைகள்!

ஈரப்பசையூட்டும்

பெரும்பாலான சரும பராமரிப்பு பொருட்களில் தேன் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டிருக்கும். இதற்கு காரணம், தேன் சருமத்தின் ஈரப்பசையை தக்க வைத்து, சருமம் வறட்சியடைவதைத் தடுக்கும்.

சருமத் துளைகளை சுத்தம் செய்யும்

சருமத் துளைகளை சுத்தம் செய்யும்

ஃபேஸ் மாஸ்க்குகளில் தேனை சேர்த்துக் கொண்டால், அது சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத் துளைகளை ஆழமாக சுத்தம் செய்து, சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும்.

பாடி கிளின்சர்

பாடி கிளின்சர்

2 டேபிள் ஸ்பூன் தேனை ஒரு கப் சுடுநீரில், குளிக்கும் போது அந்நீரை குளிக்கும் நீரில் கலந்து குளிக்க, தசைகள் ரிலாக்ஸ் அடைந்து, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால் தலைக்கு குளிக்கும் போது இந்நீரைப் பயன்படுத்தாதீர்கள்.

க்யூட்டிகிள்களை ஈரப்பதமூட்டும்

க்யூட்டிகிள்களை ஈரப்பதமூட்டும்

நெயில் பாலிஷை நகங்களில் இருந்து நீக்கிய பின், க்யூட்டிகிள்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இதனைத் தவிர்க்க 1 டீஸ்பூன் தேனை 1/4 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, நகங்களில் தடவி, பின் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் நகங்களில் உள்ள க்யூட்டிகிள் ஆரோக்கியமாக இருக்கும்.

வெயில் எரிச்சல்

வெயில் எரிச்சல்

வெயிலில் சுற்றி சருமம் சிவந்து கடுமையான எரிச்சலை உண்டாக்கினால், 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் தேனை எடுத்து ஒன்றாக கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து, கழுவுங்கள். பின் உடனே மாய்ஸ்சுரைசர் எதையேனும் தவறாமல் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Using Papaya And Honey On Skin

Take a look at some of the amazing benefits of using papaya and honey on skin.
Story first published: Saturday, May 20, 2017, 15:37 [IST]
Desktop Bottom Promotion