For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகான பெண்கள் வெளியே சொல்ல மறுக்கும் தங்களது அழகு ரகசியங்கள் என்ன தெரியுமா?

இங்கே இந்தியப்பெண்களின் அழகு இரகசியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

By Lakshmi
|

அழகான சருமம் என்பது அனைவரது விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால் வெயிலில் செல்வது, தூசி மற்றும் புகை ஆகியவற்றால் நமது சருமம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக தோல் கருமை, பருக்கள், தழும்புகள் என அனைத்தும் வந்துவிடுகிறது. இதில் இருந்து தப்பிக்க தினமும் இவற்றை எல்லாம் செய்தால், உங்கள் முகம் பூப்போல மென்மையாகவும், முழு நிலவைப்போல பொலிவாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. அதிக வாசனை உள்ள சோப் வேண்டாம்

1. அதிக வாசனை உள்ள சோப் வேண்டாம்

சோப் வாங்கும் போது அதிக வாசனை உள்ள சோப்புகளை தவிர்த்து, க்ரீம் அடிப்படையிலான சோப்புகளை பயன்படுத்துங்கள். இது குளித்த பிறகு கூட உங்கள் சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைக்கிறது.

2. கால், கைகளுக்கு மாய்சுரைசர்

2. கால், கைகளுக்கு மாய்சுரைசர்

கால்கள் மற்றும் கைகளுக்கு இரவு தூங்கும் முன்பு மாய்சுரைசர் க்ரீமை தடவி பின் கைகளுக்கு கிளவுஸ் மற்றும் கால்களுக்கு சாக்ஸ் போட்டு கொண்டு தூங்குவது, கை, கால்களை மிருதுவாக பாதுகாக்கும்.

3. ஸ்கிரப்

3. ஸ்கிரப்

ஸ்கிரப் தேய்த்து குளிப்பதால், உடலில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன. அதற்காக மிகவும் அழுத்தி தேய்த்து குளிக்க கூடாது.

4. பவுடர் தடவுங்கள்

4. பவுடர் தடவுங்கள்

மார்பகம், அக்குள் போன்ற பகுதிகளில் பவுடர் தடவுவதன் மூலம் வியற்வையினால், பாக்டீரியாக்கள் வளர்வதையும் அரிப்புகளையும் தடுக்க முடிகிறது.

5. விட்டமின் சி

5. விட்டமின் சி

விட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் இளமையான் தோற்றப்பொலிவை பெற முடிகிறது.

6. சரியான விட்டமின் அளவு

6. சரியான விட்டமின் அளவு

விட்டமின் ஏ, சி, மற்றும் சி ஆகிய உணவுகளை தினசரி சரியான அளவு எடுத்துக்கொண்டால், சருமத்தின் பளபளப்பு கூடும். கேரட், சக்கரைவள்ளிக்கிழங்கு, முள்ளங்கி ஆகியவற்றில் விட்டமின் ஏ அடங்கியுள்ளது. விட்டமின் சி, ஆரஞ்ச், ப்ரோகோலி, ஸ்ட்ராபெரி, கிவி ஆகியவற்றி உள்ளது. மீன், முழு தானிய உணவுகளில் விட்டமின் பி உள்ளது.

7. பூண்டு சாப்பிடுங்கள்

7. பூண்டு சாப்பிடுங்கள்

பூண்டில் நிறைய பலன்கள் அடங்கியுள்ளன. உங்களது இளமையான தோற்றத்திற்கு இது காரணமாக அமையும். மேலும் தொற்றூக்களில் இருந்தும் உங்களை பாதுகாக்கிறது. எனவே தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள்

8. டீ குடியுங்கள்டீ அதிக அளவு ஆண்டிஆக்சிடண்டுகளை கொண்டுள்ளது. எனவே சருமத்தின் அழகை கூட்டுவதோடு சரும பிரச்சனைகள் வராமலும் பாதுக்காக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

8. டீ குடியுங்கள்டீ அதிக அளவு ஆண்டிஆக்சிடண்டுகளை கொண்டுள்ளது. எனவே சருமத்தின் அழகை கூட்டுவதோடு சரும பிரச்சனைகள் வராமலும் பாதுக்காக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

டீ அதிக அளவு ஆண்டிஆக்சிடண்டுகளை கொண்டுள்ளது. எனவே சருமத்தின் அழகை கூட்டுவதோடு சரும பிரச்சனைகள் வராமலும் பாதுக்காக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

9. தண்ணீர் குடியுங்கள்

9. தண்ணீர் குடியுங்கள்

தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுகிறது. இதனால் முகத்திற்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

10. ஆலிவ் ஆயில்

10. ஆலிவ் ஆயில்

முகம், மூட்டுக்கள் ஆகியவற்றில் ஆலிவ் ஆயிலை தடவுவதால், கருமை நீங்குகிறது. இது வரண்ட திட்டுக்களை உடலில் இருந்து நீக்குகிறது.

11. ஐஸ் மசாஜ்

11. ஐஸ் மசாஜ்

ஐஸ் மசாஜ் பல நல்ல பலன்களை தருகிறது. ஐஸ்கட்டிகளை ஒரு துண்டில் போட்டு, ஒத்தடம் தருவதால், இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சருமத்தில் உள்ள துளைகள், தழும்புகள், முகப்பருக்கள் நீங்கி, சருமம் புத்துணர்வு பெரும்.

12. கற்றாழை

12. கற்றாழை

நீங்கள் பாட்டில்கள் கிடைக்கும் கற்றாளை அல்லது இயற்கையான கற்றாழையின் ஜெல்லை உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் உடல் குளிர்ச்சி அடைந்து தோற்றம் மேம்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

beauty secrets of fair girls

here are the some beauty secrets of fair indian girls
Story first published: Wednesday, May 24, 2017, 17:04 [IST]
Desktop Bottom Promotion