இந்த அழகு பொருட்கள்தான் உங்கள் சருமத்தை மோசமடையச் செய்யும். கவனமாக இருங்கள்!

அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் அழகு சாதனப் பொருட்களை நாம் உபயோகப்படுத்துகிறோம். அது தவறில்லைதான் ஆனால் அளவுக்கு மீறினால் அழகு சாதன பொருட்களால் உண்டாகும் பாதிப்புகளை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Written By:
Subscribe to Boldsky

அழகுப் பொருட்களை எப்போவாவது அல்லது மிகக் குறைவாக உபயோகித்தால் பாதகம் இல்லை. ஆனால் தினமும் அதுவும் ஓவர் மெக்கப்புடன் இருப்பது உங்கள் சருமத்தை விரைவில் பாதிக்கும்.

அவ்வகையில் உங்கள் சருமத்தை பாதிக்கும் மோசமான அழுக் பொருட்கள் எவை என தெரிந்து கொள்ள விருப்பமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விட்டமின் ஏ கூடிய சன் ஸ்க்ரீன் லோஷன் :

விட்டமின் ஏ கூடிய சன் ஸ்க்ரீன் லோஷன் :

விட்டமின் ஏ அடங்கிய சன் ஸ்க்ரீன் லோஷனால் சருமத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் செல் சிதைவு மற்றும் புற்று நோய்செல்கள் ஏற்படலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே விட்டமின் ஏ கூடிய சன் ஸ்க்ரீன் லோஷனை உபயோகிக்காதீர்கள்.

சுத்தப்படுத்தும் பிரஷ் :

சுத்தப்படுத்தும் பிரஷ் :

சருமத்தை சுத்தப்படுத்தும் பிரஷ் நிறைய பேர் விரும்புவதுண்டு. ஆனால் அவை சருமத்துளைகளை பெரிதுபடுத்தும். அதோடு சருமத்தையும் பாதிப்பதால் எரிச்சல், அலர்ஜி ஆகியவை உண்டாகும்.

 ட்ரை ஷாம்பு :

ட்ரை ஷாம்பு :

ட்ரை ஷாம்பு உபயோகபப்டுத்துவது எளிது. நீர் அவசியம் இல்லை. கூந்தலும் வறண்டு போகாதுதான். ஆனால் அடிக்கடி இதனை உபயோகிக்க வேண்டாம். இதனால் அவை தலையில் உள்ள துவாரங்களை அடைத்து பொடுகை ஏற்படுத்திவிடும். அதோடு முடி உதிர்தலலையும் தந்துவிடும்.

சிலிகான் ப்ரைமர் :

சிலிகான் ப்ரைமர் :

மேக்கப் போடுவதற்காக உபயோகப்படுத்தும் ப்ரைமர் இது. இது தழும்பு மறைந்துமற்றும்சரிசமமான மேக்கப்பை தருவதால் எல்லாரும் விரும்பி உபயோகித்தாலும் அவை சரும துவாரங்களை பெரிதாக்குகிரது. இதனால் முகப்பரு, சுருக்கம் விரைவில் உண்டாகும்.

திரவ லிப்ஸ்டிக் :

திரவ லிப்ஸ்டிக் :

இப்போது அழகு சாதனப் பொருட்களில் அட்வான்ஸ்டாக வந்த ஒன்றுதான் திரவ வடிவில் வந்திருக்கும் லிப்ஸ்டிக். இதனை தினமும் உபயோகப்படுத்தினால் உதடு வெடித்துவிடும். மிகவும் வறண்டு விடும். அதிக நேரம் போடுவதும் தவறாகும். எனவே இதனை தவிர்த்துவிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Beauty products that may harm to your skin if frequently used

Beauty products that may harm to your skin if frequently used
Please Wait while comments are loading...
Subscribe Newsletter