For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கு அழகை அள்ளித் தரும் மூலிகைகள் என்னென்ன?

பெண்கள் உபயோகப்படுத்த வேண்டிய முக்கிய அழகுக் குறிப்புகள் எவையென இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. உபயோகப்படுத்தி பயன்பெறுங்கள்.

|

நமக்கு எளிதிலே, அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், உணவு பொருட்களை கொண்டு வீடடிலே இருந்தபடி நோய்க்கான மருந்து தயாரிப்பது பற்றியும், இயற்கையாகவே மூலிகைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுவது குறித்தும் பார்த்து வருகிறோம்.

Beauty benefits of Herbs that every woman should know

அந்தவரிசையில் இன்று பெண்களின் முகம் மற்றும் சருமப்பொலிவுகள் மெருகேற்றி தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் அழகு குறிப்பு மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி பார்ப்போம்.

முகம் பொலிவு பெறுதல், முகச்சுருக்கம் இன்மை, நகங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வது, தலைமுடியை மென்மையாக, கருமையாக பராமரிப்பது, உடல் நிறத்தை பேணி செழுமையுடன் வைத்துக்கொள்ளவது ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் சோற்றுக்கற்றாழை, மருதாணி இலை, கதம்பப்பூ ஆகியவற்றின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகத்தை ஜொலிக்க வைக்கும் மூலிகை பேக் :

முகத்தை ஜொலிக்க வைக்கும் மூலிகை பேக் :

பசுமையான மஞ்சள் கிழங்கை அரைத்து அதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து மாஸ்க் போல் முகம் மற்றும் வெயில் படும் இடங்களில் வாரம் ஒரு முறை பயன்படுத்தி வர, உடலின் கருமை நிறம் மறைந்து பளபளக்கும்.

முகத்தை ஜொலிக்க வைக்கும் மூலிகை பேக் :

முகத்தை ஜொலிக்க வைக்கும் மூலிகை பேக் :

இந்த மாஸ்க் சருமத்தை மென்மையாகவும், தொற்று கிருமிகளில் இருந்தும் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மஞ்சளை முகத்தில் பயன்படுத்தி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியன மறையும்.

கண்களுக்கு குளிர்ச்சி தரும் கதம்பம் :

கண்களுக்கு குளிர்ச்சி தரும் கதம்பம் :

எல்லா பூக்களுடன் வாசனைப் பூக்களுடன் சேர்த்து கட்டப்படும் கதம்பப் பூவை தலையில் வைத்தால் பேன், பொடுகு, தலைவலி பிரச்னைகள் முடிவுக்கு வரும். கண்கள் மற்றும் தலை குளிர்ச்சி அடைவதோடு, மன அமைதி பெற்று கண் நரம்புகள் வலுப்பெருகின்றன. பொடுகு எட்டிப்பார்க்காது.

 வெயிலுக்கு இதமான தலையை குளிர்ச்சி செய்யும் ஹேர் ஆயில்:

வெயிலுக்கு இதமான தலையை குளிர்ச்சி செய்யும் ஹேர் ஆயில்:

தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, நெல்லிக்காய் வற்றல் பொடி, மருதாணி இலை விழுது, சோற்றுக்கற்றாழை சாறு ஆகிய்வற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, அரைத்த மருதாணி விழுது, சோற்றுக்கற்றாழை, எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக்கவும். அவை தைலப்பதத்துக்கு வந்ததும், இறக்கவும். இதனை வெயில் காலங்களில் தலையில் தேய்த்து வர உடல் சூடு, கண் சிவப்பு, முடிகொட்டுதல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

 மருதாணி:

மருதாணி:

விழாக்களின் போது பெண்கள் கைகளில் மருதாணியிட்டு கொள்வது வழக்கம். அவ்வாறு மருதாணி அரைக்கும்போது, எலுமிச்சை சாறு கலந்து பூசுவதால் செம்மை நிறத்தை அதிகரிக்க செய்யும்.

இதனை நகங்களில் பூசுவதால் நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, கிருமி தாக்குதல் தவிர்க்கப்படும். கையில் பூசும்போது பித்தம், வாதம் ஆகியவற்றை சமன் செய்து மனதுக்கு அமைதியை தருகிறது.

அதோடு பாதங்களில் பூசுவதால் வெடிப்பு மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty benefits of Herbs that every woman should know

Beauty benefits of Herbs that every woman should know
Story first published: Friday, March 24, 2017, 15:55 [IST]
Desktop Bottom Promotion