For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களை இன்னும் வசீகரிக்கச் செய்ய பழத் தோல்களை எப்படி உபயோகிப்பது என தெரியுமா?

பழத் தோல்கள் சத்துக்கள் நிறைந்தது . அவை சரும பொலிவை உண்டாக்கும். தலை முடி வளர்ச்சியை அதிகரிக்கும். அப்படி பலவகையான பழங்களால் எப்படி சரும அழகை அதிகரிக்கச் செய்யலாமென பார்க்கலாம்.

|

பழத் தோல்களில் உண்மையில் பழத்தைவிட மிகச் சிறந்த சத்துக்கள் அமைந்திருக்கின்றன. அவற்றை உண்பதுபோலவே சரும அழகிற்கும் பயன்படுத்தினால் இருமடங்கு நன்மைகள் கிடைக்கும். அழுக்கு, இறந்த செல்கள் போன்ரவற்றை நீக்கி சருமத்தை புத்தும் புதிதாக்குகின்றன.

அப்படி பலவகையான பழங்களால் எப்படி சரும அழகை அதிகரிக்கச் செய்யலாமென பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதுளை தோல் :

மாதுளை தோல் :

மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பைக் கலந்து, குளித்தாலோ, உடலில் பூசிக்கொண்டாலோ, வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

மாதுளை தோல் :

மாதுளை தோல் :

மாதுளம்பழத் தோலைப் பொடித்து, தண்ணீர்விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முகப்பரு உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும்.

 எலுமிச்சை தோல் :

எலுமிச்சை தோல் :

எலுமிச்சைத் தோல் ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படுகிறது. சிலருக்குக் கை, கால் முட்டிகளில் கறுப்பாக இருக்கும். எலுமிச்சைத் தோலை கருமையான இடங்களில் தேய்த்துவர, கருமை நீங்கி, நல்ல பலன் கிடைக்கும். மேலும், இது சருமத்துக்குப் பளபளப்பையும் தர வல்லது.

 எலுமிச்சை தோல் :

எலுமிச்சை தோல் :

பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், எலுமிச்சைப்பழத் தோலை நன்கு கசக்கி, தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தால், பொடுகு குறைந்து, சில வாரங்களில் நல்ல பலன் தெரியும்.

மாம்பழத் தோல் :

மாம்பழத் தோல் :

மாம்பழத்தோலைக் கூழாக்கி, அதனுடன் பால் கலந்து சருமத்தில் தடவி வந்தால், கருவளையம் மெல்ல நீங்கும். இதனுடன் சிறிது தேன் கலந்து, கழுத்தில் கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு தோல் :

ஆரஞ்சு தோல் :

ஆரஞ்சுப்பழத் தோலை பாத வெடிப்புகளில் பூசி வந்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். ஆரஞ்சுப்பழத் தோல் பொடியுடன் சிறிதளவு பால், தயிர் சேர்த்து, ஃபேஸ்பேக் போல பயன்படுத்த, பொலிவிழந்த முகம் களைகட்டும். ஆரஞ்சுப்பழத் தோலில் இருந்து சாறு எடுத்து, முகத்துக்குப் பூசிவர கரும் புள்ளிகள் நீங்கி, முகம் பளபளப்பாக மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty benefits of fruit peels

Beauty benefits of fruit peels
Desktop Bottom Promotion