சுருக்கம் மறைந்து மிருதுவான சருமம் கிடைக்க சர்க்கரையை எப்படி பயன்படுத்தலாம்?

சரும சுருக்கம் மறைந்து இளமையான சருமம் கிடைக்க சர்க்கரையை எப்படி பயன்படுத்தலாம் என இங்கே சில அழகுக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Written By:
Subscribe to Boldsky

சர்க்கரை இனிப்பிற்கு மட்டுமல்ல அழகிற்கு சிறந்தது. சருமத்திலுள்ள அழுக்குகளை வெளியேற்றும். சருமம் மிருதுவாகும். சுருக்கங்களை மறையச் செய்யும். இறந்த செல்களை அகற்றுவதால் சருமம் சுவாசிக்க முடியும்.

இதனால் இளமையாகவும் பொலிவாகவும் உங்களை வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு சர்க்கரையை இளமையான சருமம் பெற எப்படி உபயோகிக்கலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை எலுமிச்சை ஸ்க்ரப் :

சர்க்கரை எலுமிச்சை ஸ்க்ரப் :

சர்க்கரை - 2 ஸ்பூன்
எலுமிச்சை - 2 துளிகள்

சர்க்கரையை ஒன்றுக்கு இரண்டாக பொடி செய்து அதனுடன் எலுமிச்சையை கலந்து முகத்தில் தடவி இதமாக தேய்க்கவும். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

இது வெயிலினால் உண்டாகும் கருமையை அகற்றும். கரும்புள்ளியையும் மறையச் செய்யும்.

 பால் க்ரீம் ஸ்க்ரப் :

பால் க்ரீம் ஸ்க்ரப் :

ஆரஞ்சு எண்ணெய் - 2 துளி
சர்க்கரை - 1 ஸ்பூன்
பால் க்ரீம் - 2 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 3 ஸ்பூன்

மேலே சொன்னவற்றை எல்லாம் கலந்து கையினாலேயே பொடி செய்து பின் முகத்தில் தேயுங்கள். சில நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு செய்தால் தினமும் தங்கும் அழுக்குகள் அகலும். முகம் சுத்தமாக பிரகாசிக்கும்.

தேன் க்ரப்

தேன் க்ரப்

சர்க்கரையை லேசாக பொடித்து தேனையும் சர்க்கரையையும் சம அளவில் எடுத்து கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். சில நிமிடங்கள் இருந்தால் போதும். சுருக்கத்தை மறையச் செய்யும். முகம் பளிங்கு போல் இருக்கும்.

பாதாம் எண்ணெய் ஸ்க்ரப் :

பாதாம் எண்ணெய் ஸ்க்ரப் :

பாதாம் எண்ணெய் 2 ஸ்பூன் எடுத்து அதில் 1ஸ்பூன் அளவு பொடித்த சர்க்கரையை கலந்து முகத்திற்கு உபயோகியுங்கள். இது சருமத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி முகத்தை பளீரிட வைக்கும்.

உதடு ஸ்க்ரப் :

உதடு ஸ்க்ரப் :

பீட்ரூட் சாறு எடுத்து அதில் சர்க்கரையை கலந்து உதட்டில் தேய்க்கவும். . காய்ந்தது கழுவலாம். இப்படி செய்தால் உதடு மென்மையாகும். கருமை மறைந்து சிவப்பு நிறம் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Homemade sugar scrubs that can give you flawless skin

5 Homemade sugar scrubs that can give you flawless skin
Please Wait while comments are loading...
Subscribe Newsletter