For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதுளை எப்படி உங்கள் சருமத்திற்கு அட்டகாசமான இளமையை தரும் தெரியுமா?

இந்த கட்டுரையில் மாதுளை பூச்சை எவ்வாறு முகத்திற்கு பயன்படுத்துவது என்பதை பட்டியலிட்டுள்ளோம். இது மிகவும் எளிய செய்முறை. இதைப் பின்பற்றி தெளிவான மற்றும் பளபளப்பன முகத்தை பெற்றிடுங்கள்.

By Batri Krishnan
|

நம்முடைய ஆரோக்கியம் மற்றும் அழகை பேணிக்காக்க நாம் மிகவும் பிரயத்தனப்படுகின்றோம்.

பல்வேறு மூலிகைகள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றோம். நம்முடைய அரோக்கியம் மற்றும் அழகை பேணிக்காப்பதில் மாதுளை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

what happens when you apply pomegranate peel on your skin

இது நம்முடைய தோலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றது. இது தோலின் சுருக்கத்தை ஒழித்து நம்முடைய வயதை குறைத்து பொழிவூட்டுகின்றது.

மாதுளையை இளமையை மீட்டெடுக்கும் அற்புத அமிர்தமாக திகழ்கின்றது. எனவே எதற்காக காத்திருக்கின்றீர்கள். மாதுளையை கிலோக் கணக்கில் வாங்கி உங்களின் இழந்த இளமை மீட்டெடுங்கள்.

அதை எவ்வாறு உங்களின் முகத்திற்கு பயன்படுத்துவது என்பதைப் பற்றிய செயல்முறையைத் தெரிந்து கொள்ள கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெப் -1

ஸ்டெப் -1

ஒரு கை நிறைய மாதுளை முத்துக்களை எடுத்து சூரிய ஒளியில் காய விடுங்கள்.

மாதுளை முத்துக்கள் குறைந்தது 24 மணி நேரத்திற்கு காய வேண்டும். மாதுளை முத்துக்கள் அடர் சிவப்பு நிறத்தில் இருந்து சற்று பழுப்பு நிறமாக மாறும் வரை காய விடுங்கள்.

அதன் பின்னர் மாதுளை முத்துக்களை இடித்து பொடியாக மாற்றுங்கள்.

ஸ்டெப் -2

ஸ்டெப் -2

ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி மாதுளை பொடியை சேருங்கள். அதனுடன் சம அளவு பழுப்பு சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்க்கவும்.

ஸ்டெப் -3

ஸ்டெப் -3

ஒரு குச்சியை எடுத்து கலவையை நன்கு கலக்கவும். மாதுளை பொடி வறண்டு இருந்தால் அதனுடன் ஒரு சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.

உங்களுக்குத் தேவையான அளவு ஈரப்தம் வரும் வரை கலவையுடன் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். அதன் பின்னர் கலவையை மீண்டும் நன்கு கலக்கவும்.

ஸ்டெப் -4

ஸ்டெப் -4

லேசான சுத்தப்படுத்திகளை பயன்படுத்தி உங்கள் முகத்தை கழுவ வேண்டும். இதன் காரணமாக உங்களின் முகத்தில் உள்ள அனைத்து மாசு மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும். அதன் பின் உங்களின் முகத்தை சிறிது உலர விடுங்கள்.

ஸ்டெப் -5

ஸ்டெப் -5

உங்களுடைய முகத் தோல் சற்றே ஈரமாக இருக்கும் போது, உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் மாதுளை கலவையை தடவி ஒரு பூச்சை உருவாக்குங்கள். அந்த பூச்சை சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் உலர் விடுங்கள்.

ஸ்டெப் -6

ஸ்டெப் -6

உங்களின் முகப் பூச்சு முழுமையாக உலர்ந்த் பின்னர் அது சுருங்கத் தொடங்கும். அப்பொழுது உங்களுடைய முகத்தில் சிறிது தண்ணீர் தெளித்து வட்ட வடிவ இயக்கத்தில் உங்களின் முகத்தை மசாஜ் செய்த்திடுங்கள்.

அதன் பின்னர் சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் உங்களின் முகத்தை கழுவி விடுங்கள்.

உங்களின் முகத்தை முழுமையாக கழுவிய பின்னர் அதை குளிர்ந்த தண்ணீர் கொண்டு துடையுங்கள். இவ்வாறு செய்வது உங்களின் முகத்தில் உள்ள துளைகளை உடனடியாக அடைக்க உதவும்.

ஸ்டெப் -7

ஸ்டெப் -7

அதன் பின்னர், உங்களின் முகத்தை மாய்ஸ்சரைசர் கொண்டு மசாஜ் செய்திடுங்கள். இவ்வாறு செய்வது உங்களின் முகத் தோலிற்கு போஷாக்களிக்கும். முகப் பொலிவை தூண்டி விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what happens when you apply pomegranate peel on your skin

what happens when you apply pomegranate peel on your skin
Story first published: Friday, December 9, 2016, 12:00 [IST]
Desktop Bottom Promotion