For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகை பாதுகாக்கும் விட்டமின்கள் எவையென தெரிய வேண்டுமா?

|

அழகிற்கும் விட்டமின்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. எவ்வாறு கார்போஹைட்ரேட், புரோட்டின் உடல் வளர்ச்சிக்கு தேவையோ, அவ்வாறு உடல் மெருகூட்டவும். செல்களின் போஷாக்கிற்கும் விட்டமின்கள் தேவை.

Vitamins that nourishing your skin

விட்டமின்கள் எடுத்துக் கொள்ளும்போது அழகு மெருகேருகின்றன என்பது உண்மை. இரண்டு விதமான விட்டமின்கள் உள்ளன. கொழுப்பில் கரையும் விட்டமின்கள், நீரில் கரையும் விட்டமின்கள்.

கொழுப்பில் கரையும் விட்டமின்கள் உடலில் சேமித்துவைக்கப்படுகின்றன. தேவைப்படும்போது அவை உபயோகப்படுத்தப்படுகிறது. கொழுப்பில் கரையும் விட்டமின்கள் ஏ,டி ஈ, கே ஆகியவை இளமையாகவும் சுருக்கங்களை தடுக்கவும் உபயோகப்படுத்தப்படுகின்றன. கண்களில் ஏற்படும் கருவளையத்தை போக்கிவிடும்.

நீரில் கரையும் விட்டமின்கள் பி காம்பளக்ஸ் மற்றும் சி ஆகியவை உடலில் சேமிக்க வைக்கமுடியாது. அதிகப்படியான சத்து வெளியேறிவிடும். இந்த வகை விட்டமின்கள் எவ்வாறு அழகை ஏற்படுத்துகிறது என பார்க்கலாம்.

விட்டமின் பி1 :

விட்டமின் பி 1 கொலாஜன் உற்பத்தியை அதிகமாக்கி, சுருக்கங்களை போகுகிறது. சிவப்பு அரிசி, கோதுமை, ஈஸ்ட், , சோயா பீன்ஸ், முந்திரி, ஓட்ஸ் போன்றவற்றில் கிடைக்கிறது.

விட்டமின் பி2 :

ரைபோஃப்ளேவின் அல்லது விட்டமின் பி2, உடலில் புதிய செல்களையும் திசுக்களையும் உற்பத்தி செய்கிறது. இதனால் செல் இறப்பு குறைவாகிறது. செல் இறப்புவிகிதம் குறைந்தால் இளமையாக சருமம் இருக்கும்.

பால், முட்டை, இறைச்சி, கல்லீரல், தானியங்கள், பச்சை காய்கறிகளில் கிடைக்கின்றன.

நியாசின் என்ற விட்டமின் பி3 :

விட்டமின் பி3 வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் முறையாக நச்சுக்கள் மற்றும் கழிவுகள் பிரிக்கப்பட்டு வெளியேறப்படுகின்றன.

மீன், கோழி இறைச்சி, கோதுமை, சிவப்பு அரிசியில் இந்த வகை வைட்டமின் கிடைக்கிறது.

விட்டமின் பி5 :

உடல் பருமனை குறைக்க விட்டமின் பி5 உணவுகளை உண்ணலாம். மேலும் அவை முகத்தில் பருக்கள் வராமல் இருக்க உதவுகிறது. அதிக புரோட்டினை உட்கிரகிக்கச் செய்கிறது.

மக்காச்சோளம், முட்டை, சீஸ், தக்காளியில் கிடைக்கிறது.

பைரிடாக்சின் என்ற விட்டமின் பி6 :

இவை நிறைய ஆன்டிஆக்ஸிடென்டுகள் கொண்டவை. நார்சத்துக்களும் கொண்டவை. சருமட்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது. சருமம் பொலிவாக இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கலாம்.

முழு தானியங்கள், பயறுகள்,வாழைப்பழம் போன்றவற்றில் இந்த சத்துக்கள் உள்ளன.

பயோடின் என்ற விட்டமின் பி7 :

இவை கூந்தல் மற்றும் சரும செல்களை தூண்டும். நகங்கள் மற்றும் கூந்தல் வளர உதவும் விட்டமின் இது. இவை பயறுவகைகள், பழங்கள், காய்கறிகள், முட்டை,சீஸ் போன்றவற்றில் கிடைக்கிறது.

போலிக் அமிலம் என்ற விட்டமின் பி9 :

ரத்த சோகையை தடுக்கும். இள நரையை தடுக்கும் விட்டமின் இது. கூந்தல் வலர்ச்சியை தூண்டும். இந்த விட்டமின் பசலைக்கீரை, ஈரல், ஆரஞ்சு ஜூஸ், கருஞ்சீரகம் போன்றவற்றில் உள்ளது.

கோபாலமின் என்ற விட்டமின் பி12 :

செல்களை புதுப்பிக்கிறது. இளமையாக இருக்க இந்த விட்டமின் நன்மை செய்கிறது. சருமத்தை மெருகேற்றும். செய்கிறது. முட்டை, கோழி, தயிர், பால் பயறு போன்றவற்றில் கிடைக்கிறது.

விட்டமின் சி :

விட்டமின் சி சுருக்கங்களை தடுக்கும். முகப்பரு, கருமை, ஆகியவற்றை நீக்கும். இறந்த செல்களை வெளியேற்றும் . கண்களுக்கு அழகை தரும். இளமையாக இருக்கலாம். சருமத்தில் மினுமினுப்பாக இருக்கும். சிட்ரஸ் பழங்கள், வெள்ளரிக்காய், எலுமிச்சை, ஆகியவைகள் விட்டமின் சி நிறைந்தவை.

English summary

Vitamins that nourishing your skin

Vitamins that nourishing your skin
Story first published: Monday, June 20, 2016, 9:32 [IST]
Desktop Bottom Promotion