For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்து கருமையாக காணப்படுகிறதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!

By Maha
|

எண்ணெய் பசை சருமத்தினருக்கு சாதாரணமாகவே முகத்தில் எண்ணெய் வழியும். அதிலும் கோடையில் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவில் மோசமாக இருக்கும். இப்படி முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருந்தால், பருக்கள் மற்றும் இதர சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும்.

அதுமட்டுமின்றி சருமமும் கருமையாக காணப்படும். இதனைத் தடுக்க வேண்டுமானால், எண்ணெய் பசை சருமத்தினர் தினமும் ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க வேண்டும். இங்கு முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதினா

புதினா

புதினா இலைகளை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை சுரப்பது தடுக்கப்படும். இம்முறையை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி எண்ணெய் பசை சருமத்தினர் தினமும் செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரித்துக் காணப்படும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர்

தினமும் ரோஸ் வாட்டரைக் கொண்டு முகத்தை பலமுறை துடைத்து வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேறி, முகம் பளிச்சென்று காணப்படும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எண்ணெய் பசை சருமத்தினர் எலுமிச்சை சாற்றினை முகத்தில் நேரடியாக தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை அரைத்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

தினமும் க்ரீன் டீ குடிக்கும் போது, அதில் சிறிதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் எண்ணெய் வழிவதைத் தடுக்கலாம்.

ஐஸ் கட்டி

ஐஸ் கட்டி

சருமத்தில் வழியும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த ஐஸ் கட்டி உதவும். அதற்கு ஐஸ் கட்டியை ஒரு துணியில் வைத்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் சருமம் புத்துணர்ச்சியுடனும், எண்ணெய் வழியாமலும் இருக்கும்.

 வேப்பிலை சாறு

வேப்பிலை சாறு

வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து, அதனை சிறிது நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் எண்ணெய் பசைக் கட்டுப்படுத்தப்படுவதோடு, முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளும் அகலும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இதன் மூலமும் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

தக்காளி சாறு மற்றும் தேன்

தக்காளி சாறு மற்றும் தேன்

தக்காளி சாற்றில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இம்முறையை தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Simple & Natural Toners For Oily Skin

We often wonder how all those pretty women on the television and in the magazines have such flawless complexions.
Story first published: Saturday, April 16, 2016, 13:21 [IST]
Desktop Bottom Promotion