For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி?

|

ப்ளீச்சிங் செய்வதன் சருமத்தில் உள்ள அழுக்குகள், எண்ணெய் பசை, கருமை போன்றவை நீக்கப்பட்டு, முகப்பொலிவு அதிகரிக்க செய்யும் ஓர் செயல். பலர் ப்ளீச்சிங் செய்ய அழகு நிலையங்களுக்குச் செல்வர். மேலும் ப்ளீச்சிங் சென்சிடிவ் சருமத்தினருக்கு சரியான தேர்வு அல்ல.

உங்க முகம் பளிச்சுன்னு வெள்ளையாகணுமா? இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க...

ஆனால் அத்தகையவர்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே ப்ளீச்சிங் செய்யலாம். வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வதால், சரும ஆரோக்கியம் மேம்பட்டு, சரும பிரச்சனைகள் வருவது குறையும்.

சருமத்தை வெள்ளையாக மாற்ற எலுமிச்சையைப் பயன்படுத்தும் வழிகள்!!!

சரி, இப்போது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளீச்சிங் #1

ப்ளீச்சிங் #1

எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய்

பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் சிறிது வெள்ளரிக்காய் சாறு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ப்ளீச்சிங் #2

ப்ளீச்சிங் #2

சந்தனம், எலுமிச்சை, தக்காளி, வெள்ளரிக்காய்

1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பவுடர், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு, 1டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பேஸ்ட் செய்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

ப்ளீச்சிங் #3

ப்ளீச்சிங் #3

ஆரஞ்சு தோல் மற்றும் பால்

ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்திப் பொடி செய்து, பால் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்து, நீரில் கழுவ வேண்டும்.

ப்ளீச்சிங் #4

ப்ளீச்சிங் #4

தேன் மற்றும் பாதாம்

1 டேபிள் ஸ்பூன் தேனுடன், 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ப்ளீச்சிங் #5

ப்ளீச்சிங் #5

வெள்ளரிக்காய், கிளிசரின், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு

2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1/2 டேபிள் ஸ்பூன் கிளிசரின், 1/2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

ப்ளீச்சிங் #6

ப்ளீச்சிங் #6

முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சை சாற்றினை சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீரில் கழுவ வேண்டும்.

ப்ளீச்சிங் #7

ப்ளீச்சிங் #7

எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள்

2 டேபிள் ஸ்யூன் எலுமிச்சை சாற்றில், 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, நீரில் கழுவ வேண்டும். பின் சருமம் வறட்சியடையாமல் இருக்க மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

ப்ளீச்சிங் #8

ப்ளீச்சிங் #8

தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு

2 டேபிள் ஸ்பன் தக்காளி சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் கழுத்து கழுவ வேண்டும்.

ப்ளீச்சிங் #9

ப்ளீச்சிங் #9

வெள்ளை வினிகர்

1 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகருடன் 1 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ப்ளீச்சிங் #10

ப்ளீச்சிங் #10

ப்ளீச்சிங் பவுடர், ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் அம்மோனியா

1 டேபிள் ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடருடன், 1/2 டேபிள் ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் 1/2 டீஸ்பூன் அம்மோனியா சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி, சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Best Natural Tips For Skin Bleaching At Home

If you have uneven and dark complexion then don't need to embrass more because now you can lighten your skin and even skin tone by following some natural skin bleaching tips which are given here...
Desktop Bottom Promotion