முகப்பருக்கள் நீங்க புகழ்பெற்ற ஷானாஸ் ஹுஸைனின் அழகுக் குறிப்புகள்!!

முகப்பருக்கள் கிருமிகளால் உருவாவதென்ராலும் சிலருக்கு இயற்கையிலேயே தீவிரமாக இருக்கும். அதனை தக்கபடி பராமரிக்காவிட்டால் சருமத்தை பாழ்படுத்தும் ஷானாஸின் புகழ்பெற்ற அழகுக் குறிப்புகள்

Subscribe to Boldsky

ஷானாஸ் ஹுஸைன் உலகப்ப்புகழ்பெற்ற அழகுக்கலை நிபுணர். இவருடைய அரேபிய அழகு குறிப்புகள் பிரசித்தமானவை. முக்கியமாக ரசாயனங்கள் இல்லாமல் இயற்கை முறையில் அழகு சாதனங்களை தயாரிப்பவர். அதனாலேயே அவரின் புகழ் உலகமெங்கும் பரவியது.

Shahnaz Huzain's popular  beauty remedies for Acne

முகப்பருக்களின் வீரியத்தை பொறுத்தே நீங்கள் சிகிச்சையை மேர்கொள்ள வேண்டும். சருமத்தில் பெரிய துளைகளின் காரணமாக ஏக்னே என்று சொல்லப்படும் முகப்பருக்கள் வரும்.

என்ன செய்தாலும் பலன் தராமல் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் எந்த மாதிரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும் என்துதான் இங்கே அவர் சொல்லிருக்கும் குறிப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

முல்தானி மட்டி மற்றும் கடலை மாவு வேண்டாம் :

கடலை மாவு மற்றும் முல்தானி மட்டி சரும துளைகளில் சென்று அடைத்துக் கொள்ளும். கழுவியும் போகாமல் இன்னும் முகப்பருக்களை அதிகப்படுத்திவிடும். ஆகவே அவற்றை தவிருங்கள்.

மஞ்சள் மற்றும் தயிர் :

இரண்டையும் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். தினமும் அதனைபூசி காய்ந்தபின் கழுவுங்கள். இதனால் கிருமிகள் அழியும். முகப்பருக்களின் தீவிரம் குறைந்து மறையும்.

சந்தனம் ரோஸ் வாட்டர் :

சந்தனத்திற்கு காயத்தை ஆற்றும் தன்மை உள்ளது. சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து முகத்தில் த்டவி காய்ந்ததும் கழுவுங்கள்.

கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் :

தீவிர முகப்பருக்கள் இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த தீர்வை தருகிறது. கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரை சம அளவு எடுத்து முகப்பருகளின் மீது த்டவவும். கழுவவும். தினமும் செய்து பாருங்கள் .

வேப்பிலை :

வேப்பிலையில் ஆன்டி செப்டிக் குணம் உள்ளது. முகப்பருக்களுக்கு எதிராக செயல்படும். அதனை அரைத்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shahnaz Huzain's popular beauty remedies for Acne

Shahnaz Huzain's popular beauty remedies for Acne
Please Wait while comments are loading...
Subscribe Newsletter