30 நிமிடத்தில் வெயிலால் கருப்பான சருமத்தை வெள்ளையாக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்குகள்!

Subscribe to Boldsky

என்ன தான் மழைக்காலமாக இருந்தாலும், வெயில் கொளுத்திக் கொண்டு தான் உள்ளது. வெயிலின் அதிகப்படியான தாக்கத்தால், சருமம் கருமையாகிறது. இப்படி கருமையான சருமத்தைப் போக்க ஏராளமான நேச்சுரல் ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன.

இந்த மாஸ்க்குகள் சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதோடு, சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களையும் வழங்கும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் மாஸ்க்குகள் 30 நிமிடத்தில் சருமத்தை பொலிவோடும் வெள்ளையாகவும் வெளிக்காட்டும்.

சரி, இப்போது 30 நிமிடத்தில் வெயிலால் கருத்த சருமத்தை வெள்ளையாக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்குகள் எவையென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தக்காளி மாஸ்க்

1 தக்காளியை அரைத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, முகம், கை, கால், கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை முழுமையாக வெளியேறிவிடும்.

எலுமிச்சை + ரோஸ் வாட்டர்

1 டீஸ்பூன் ரோஸ் வாட்டருடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள உட்பொருட்கள் சரும கருமையைப் போக்கி, சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்யும்.

வாழைப்பழம் + தயிர்

1 டேபிள் ஸ்பூன் மசித்த வாழைப்பழம், 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகம், கழுத்து, கை, கால்களில் மடவி 30 நிமிடம் கழித்து, கழுவ சருமம் பொலிவாகும்.

பப்பாளி

பப்பாளியை அரைத்து, கருமையாக உள்ள முகம், கை, கால் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதன் மூலமும் சரும கருமை நீங்கும்.

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கை அரைத்து, கருமையாக இருக்கும் கை, கால், முகம், கழுத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பால்

தினமும் பாலை காட்டனில் நனைத்து சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த காட்டனால் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, சருமம் பொலிவாகும்.

சந்தன மாஸ்க்

1 டேபிள் ஸ்பூன் சந்தன பொடியுடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ, சரும செல்கள் சுத்தமாகி, முகம் பொலிவோடு காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Instant Skin De-tanning Masks That Works In Under 30 Minutes!

Listed in this article are homemade masks for tan. Instantly brighten your skin with these natural detanning masks.
Story first published: Wednesday, August 31, 2016, 12:51 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter