For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் இருக்கும் கருமை மற்றும் கரும்புள்ளியைப் போக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

|

வயது அதிகரிக்கும் போதும், குறிப்பிட்ட உடல்நல கோளாறின் போதும், சரும பிரச்சனைகளான கரும்புள்ளிகள், சரும கருமை போன்றவற்றை சந்திக் வேண்டியிருக்கும். இதற்காக கவலைப்பட வேண்டாம். இப்படிப்பட்ட பிரச்சனைகளை இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம்.

அதுவும் நம் சமையலறையில் உள்ள ஒருசில மருத்துவகுணம் நிறைந்த பொருட்களைக் கொண்டு எளிய முறையில் போக்க முடியும். இங்கு அப்படி முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் கருமையைப் போக்க உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் ஏராளமான ஊட்டச்சத்துக்களுடன் வைட்டமின் பியும் உள்ளது. இது எபிதீலியல் செல்களைப் புதுப்பிக்கும். மேலும் உருளைக்கிழங்கில் உள்ள நிக்கோட்டினமைடு சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். குறிப்பாக கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்குவதில் உருளைக்கிழங்கு மிகவும் சிறந்தது.

எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, முகத்தில் இருக்கும் கருமையான பகுதியில் 10 நிமிடம் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளின் மருத்துவ குணத்திற்கு ஈடுஇணை எதுவும் இருக்க முடியாது. இதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, சரும சுருக்கம், முகப்பரு, தழும்புகள், கருமை, கரும்புள்ளி போன்ற பல பிரச்சனைகளைப் போக்கும்.

எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

எண்ணெய் பசை சருமத்தினர்...

மஞ்சள் தூளை எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கருமை மறையும். வேண்டுமானால், இந்த மாஸ்க்கில் எலுமிச்சை சாற்றிற்கு பதிலாக வெள்ளரிக்காய் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

வறட்சியான சருமத்தினர்...

வறட்சியான சருமத்தினர்...

1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 1 டீஸ்பூன் பால் மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம் வறட்சியான சருமத்தினருக்கு நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, சரும செல்களை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.

எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சில் நனைத்து முகத்தில் தினமும் 2-3 முறை துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், சிறப்பான மாற்றத்தைக் காணலாம்.

ஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால், ஆப்பிள் சீடர் வினிகரை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Solutions for Dark Spots, Uneven Skin Tone and Hyperpigmentation

Here are some natural solutions for dark spots, uneven skin tone and hyperpigmentation. Read on to know more...
Story first published: Tuesday, August 16, 2016, 12:04 [IST]
Desktop Bottom Promotion