For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிரில் முகம் கருத்து போகுதா? இந்த ஒரே ஒரு டிப்ஸ் யூஸ் பண்ணுங்க

|

குளிர்காலத்தில் முகம் வறட்சியாகவும், கருத்தும் போய்விடும். களையில்லாமல் , ஏனோதானோவென்று இருக்கும். முக்கியமாக இந்த சமயத்தில்தான், சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும். எப்படிதான் இந்த குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாப்பது என யோசிக்கிறீர்களா?

இந்த ஒரே ஒரு குறிப்பை உபயோகப்படுத்துங்கள். முகம் ஈரப்பதம் பெற்று மென்மையாகவும் ஜீவனுடனும் இருக்கும்.

Natural remedy to remove skin tan

தேவையானவை :

யோகார்ட்- 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தக்காளி- 1 கப்
தேன்- ( வறண்ட சருமத்திற்கு மட்டும்)

இவற்றில் தக்காளி சருமத்தில் உள்ள துளைகளை சுருங்கச் செய்யும். இதனால் அழுக்குகள் இறந்த செல்கள் தங்காது.

யோகார்ட் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும். கருமையை நீக்கி, சருமத்திற்கு நிறம் அளிக்கும். எலுமிச்சை சாறு இயற்கையான பிளீச், அது கிருமி நாசினியும் கூட. குளிர்காலத்தில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களால் உண்டாகும் வெள்ளைத் திட்டுக்கள் மற்றும் முகப்பருக்களை தடுக்கும். சுருக்கங்களைப் போக்கும். இளமையாகவும் ஜொலிப்பாகவும் முகத்தை வைத்திருக்க உதவும்.

செய்முறை :

தக்காளியை மசித்து, அதில் யோகார்ட்டை சேருங்கள். இவற்றில் எலுமிச்சை சாறு கலந்து, இந்த கலவையை முகத்தில் தேய்க்கவும். வறண்ட சருமம் உள்ளவர்கள் கூட தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

20 நிமிடங்கள் கழித்து, முகத்தை கழுவலாம். வாரம் ஒருமுறை செய்தால், உங்கள் முகத்தில் மாற்றங்கள் தெரியும். புத்துணர்வோடு வலம் வருவீர்கள். முயன்று பாருங்கள்.

English summary

Natural remedy to remove skin tan

Natural remedy to remove skin tan
Story first published: Tuesday, July 12, 2016, 17:31 [IST]
Desktop Bottom Promotion