For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

15 நாட்களில் வெள்ளையான சருமம் வேண்டுமா? இதோ சில வழிகள்!

By Maha
|

இன்றைய காலத்தில் பலருக்கும் இயற்கை வழிகளைத் தான் நாடுகின்றனர். அதில் உடல் ஆரோக்கியமாகட்டும், அழகு பராமரிப்பாகவும், எதற்கும் இயற்கை வழிகள் என்னவென்று தான் தேடுகிறோம். இதற்கு கடைகளில் விற்கப்படும் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் தான் காரணம்.

கெமிக்கல்கள் அதிகம் இருப்பதால், அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. இன்றைய தலைமுறையினருக்கு அழகின் மீது அதிக அக்கறை உள்ளது. குறிப்பாக வெள்ளையாக அதிக ஆசை உள்ளது.

எனவே வெள்ளையாகவும், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றை நீக்கவும் ஒருசில இயற்கை வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பயன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை சாறு + வேர்க்கடலை எண்ணெய்

எலுமிச்சை சாறு + வேர்க்கடலை எண்ணெய்

இம்முறை கரும்புள்ளிகள் மற்றும் பிம்பிளை நீக்க சிறந்த வழி. எலுமிச்சை சாற்றில் வேர்க்கடலை எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பிம்பிள் போன்றவை மறைந்துவிடும்.

தேன் + பட்டை பொடி

தேன் + பட்டை பொடி

தினமும் பட்டை பொடியை தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி இரவில் படுக்கும் முன் தடவி மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 14 நாட்கள் செய்து வந்தால், உங்கள் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

புதினா + வெள்ளரிக்காய் சாறு

புதினா + வெள்ளரிக்காய் சாறு

வெள்ளரிக்காய் சாறு மற்றும் புதினா சாற்றினை ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தினமும் செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.

லெட்யூஸ் + கேரட் ஜூஸ்

லெட்யூஸ் + கேரட் ஜூஸ்

லெட்யூஸ் மற்றும் கேரட்டை சாறு எடுத்து ஒன்றாக கலந்து, கை, கால், முகத்தில் தினமும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, கருமை நீங்கி சருமம் நன்கு பொலிவடையும்.

சிட்ரஸ் பழச்சாறு + தண்ணீர்

சிட்ரஸ் பழச்சாறு + தண்ணீர்

எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, காட்டன் பயன்படுத்தி கை, கால், முகத்தை துடைத்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஆனால் இந்த செயல்முறைக்கு பின் மாய்ஸ்சுரைசர் ஏதேனும் பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Recipes For Instant Glowing Skin

Homemade and natural recipes are the best way to attain a glowing skin. The effective way to get instant glowing skin is only through the home remedies.
Story first published: Thursday, March 24, 2016, 13:06 [IST]
Desktop Bottom Promotion