Just In
- 46 min ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 1 hr ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 1 hr ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- News முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் திடீர் விசிட்.. கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை.. பக்கத்தில் அது யாரு?
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
உங்கள் சருமம் மிளிர உத்திரவாதம் அளிக்கும் சாக்லேட் -புதினா ஸ்க்ரப் !
சாக்லேட் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என சந்தேகம்தான். அதுவும் பெண்களுக்கு ஒரு சாக்லேட் கொடுத்தால் போதும். வேண்டும் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். அப்படி பிடித்தமான சாக்லெட் பற்றி ஏதாவது நல்ல விஷயம் சொன்னால் குஷிதானே!
அடர் பிரவுன் நிற சாக்லேட் சுவை மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதய நோய்களை தடுக்கும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
சாக்லேட் ஸ்க்ரப் :
இந்த சாக்லேட் சுவை, ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி அழகிற்கும் அற்புதம் செய்யும். முகப்பரு, வயதாகும் அறிகுறி ஆகியவற்றை மறையச் செய்யும். சருமத்தில் களையே இல்லையே என யோசிப்பவர்களுக்கு ஏற்ற ஸ்க்ரப் இதுதான்.
இந்த சாக்லெட் ஸ்க்ரப் எல்லா சருமத்திற்கும் ஏற்றது. இவற்றில் பேக்டீரியாக்களின் எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. இதனால் முகப்பருக்கள் மீது செயல் புரியும். இந்த ஸ்க்ரப் அழுக்கு, இறந்த செல்கள் ஆகியவற்றையும் அகற்றிவிடும்.
தேவையானவை :
பொடித்த
சர்க்கரை
-
அரை
கப்
நாட்டுச்
சர்க்கரை
-
அரை
கப்
புதினா
எண்ணெய்
-
1
டீ
ஸ்பூன்
கோகோ
பவுடர்
-
அரை
ஸ்பூன்
ஆலிவ்
எண்ணெய்
-
அரை
கப்
சர்க்கரை, கோகோ பவுடர், நாட்டுச் சர்க்கரை இவற்றை முதலில் கலந்து, இவற்றில் புதினா மற்றும் ஆலிவ் எண்ணெயை கலந்து, ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதிலுள்ள புதினா எண்ணெய் முகப்பருக்களை விரட்டும். கருமையை நீக்கிவிடும். சர்க்கரை சருமத்தை மென்மையாக்கும். கோகோ ஆழமாக சுத்தம் செய்து, இறந்த செல்களை அகற்றும். இவை அனைத்தும் சேர்ந்த கலவை முகத்தில் அற்புதம் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த ஸ்க்ரப் சிறிது எடுத்து, முகம் , கழுத்து, கைகளில் தேய்த்து குளிக்கலாம். வாரம் மூன்று முறை செய்யுங்கள். பலன் அற்புதமானது. சருமம் மிருதுவாகி, எந்த வித தழும்புகளும் இல்லாமல் மிளிர்வதற்கு இந்த ஸ்க்ரப் உத்திரவாதம்.