For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்றும் மசூர் தால் !!

|

முகத்தில் முகபருக்களிலிருந்து, கரும்புள்ளி, தேமல் வரை பல பிரச்சனைகள் வரத்தானே செய்யும். ஏனெனில் முகம்தான் நம் முகவரி. சுற்றுபுற சூழ் நிலையின் பாதிப்புகள் முதலில் முகத்தை தாக்கும். அதனால் அதிகமான பராமரிப்பு உங்கள் முகத்திற்கு தேவைப்படுகிறது.

மசூர்தால் புரோட்டின் அதிகம் நிறைந்தது. அவை உடலின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். அது சருமத்திற்கும் மேன்மை தருபவை. சருமத்தை இறுக்கும். சுருக்கங்களை போக்கும். மிருதுவான சருமத்தை தரும். முகத்தை பளபளபாக்கும்.

Masoor dhal to solve all you Skin problems

மசூர் தாலைக் கொண்டு எப்படி அழகு படுத்தலாம் என பார்க்கலாம்.

இறந்த செல்களை அகற்ற :

மசூர் தாலை முந்தின இரவு ஊற வைத்து, அதனை பேஸ்டாக மறு நாள் அரைத்து அதனுடன் பால் கலந்து முகத்தில் ஃபேஸியல் மாஸ்க் போடுங்கள். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம். இறந்த செல்களை அகற்றிவிடும். கண்ணாடி போன்ற பளபளப்பை தரும்.

கருமையை அகற்ற :

மசூர் தாலை பொடி செய்து அதனுடன் தேனை சம அளவு எடுத்துக் கொண்டு, முகத்தில் கருமை அதிகமாக இருக்கும் இடங்களில் தெயுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். கருமை மட்டுமின்றி சுருக்கங்களும் போய் விடும். தினமும் இதனை செய்யலாம்.

தேவையற்ற முடிகளை நீக்க :

மசூர் தாலை பொடி செய்து அதனுடன் சிறிது அரிசி மாவை கலந்து கொள்ளுங்கள். இவற்றில் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து , முகத்தில் தேயுங்கள். பின்னர் நன்றாக காயும்வரை விடுங்கள்.

காய்ந்து முகம் இறுகியவுடன், வட்ட வடிவில் அதனை தேய்த்து கழுவவும். இதனை வாரம் மூன்று முறை செய்து வந்தாக், முடி உதிர்ந்து, சருமம் மென்மையாகும்.

முகப்பருக்களை நீக்க :

1 ஸ்பூன் மசூர் தால் பொடியுடன், 1 ஸ்பூன் ஆரஞ்சு பொடி மற்றும் வெள்ளரிக்காய் சாறு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் முகப்பருக்கள் குறைந்து, படிப்படியாக அதன் தழும்புகளும் மறைந்துவிடும்.

English summary

Masoor dhal to solve all you Skin problems

Masoor dhal to solve all you Skin problems
Desktop Bottom Promotion