For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாம்பழ ஃபேஸியல் செய்வதால் பெறும் சரும நன்மைகள்!

By Hemalatha
|

சம்மர் வந்தாலே மாம்பழ சீஸனை நினைக்காம இருக்க முடியுமா? முக்கனியில் ராஜாவான மாம்பழத்தை பிடிக்காதவங்க யாராவது இருக்காங்களா?

இந்த அடிக்கிற வெயிலுக்கு சில்லுன்னு எல்லா பழங்களும் சாப்பிடத்தோணும். அதுவும் செக்க்க சிவந்து இருக்கும் மாம்பழத்தை ரொம்ப ரசிச்சு சாப்பிடத் தோணும்.

Mango Facial to improve skin tone

மாம்பழத்துல எல்லா சத்துக்களும் முக்கியமா நார்ச்சத்தும் இருக்கிறது. சில ஸ்லிம் பியூட்டிஸ் மாம்பழம் சாப்பிட்டா குண்டாகிவிடுவோம்னு தொடக் கூட மாட்டாங்க.

ரிலாக்ஸ்... மாம்பழம் சாப்பிடறதால உடல் புஷ்டி ஆகுமே தவிர குண்டாக மாட்டாங்க. ரெண்டுக்கும் அர்த்தம் புரிஞ்சுக்கனும்.

இதுல நார்சத்தும் அதிகமா இருக்கிறதால் கொழுப்பை கட்டுப்படுத்தும். உடல் எடையை அதிகப்படுத்தாது. மாம்பழத்தின் தோலிலும் அதிக சத்துக்கள் உள்ளன. தோலினைக் கொண்டு நம் அழகை மேலும் மெருகூட்டலாம்.

தொடர்ந்து மாம்பழத்தை தோலுடன் சாப்பிட்டு பாருங்கள். ஒரே வாரத்தில் வித்யாசம் காண்பீர்கள். அதேபோல் மாம்பழ ஃபேஸியல் செய்திருக்கிறீர்களா?

மாம்பழத்தில் செய்யும் ஃபேஸியல் சருமத்தில் மினுமினுப்பைக் கூட்டும். உங்கள் நிறத்தினை அதிகரிக்கச் செய்யும். மாம்பழ ஃபேஸியலின் நன்மைகள் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மாம்பழ ஃபேஸியல் :

மாம்பழ ஃபேஸியல் ஒன்றும் பெரிதாக மெனக்கெட வேண்டாம். மாம்பழ சதைப் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடம் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். உங்கள் முகம் ஜொலிப்பதை கண்கூடாக பார்ப்பீர்கள்.

முகத்தில் கரும்புள்ளி அகல :

முகத்திலும், மூக்கிலும் கரும்புள்ளிகள் உள்ளனவா? நன்றாக காய வைத்த மாம்பழத் தோலினை பொடி செய்து கொள்ளுங்கள். அதனுடன் தேன் சேர்த்து, கலந்து முகத்தில் நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். ஒரு வாரம் தொடர்ந்து செய்தால், கரும்புள்ளிகள் போயே போச்..

சுருக்கங்கள் ஓடிவிடும் :

மாம்பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. அவை முகத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். மாம்பழ சதைப் பகுதியுடன் முட்டை வெள்ளைக் கருவை சேர்த்து, நன்றாக கலக்குங்கள்.

பின் முகத்தில் ஃபேஸ் பேக்காக போட்டு 20 நிமிடம் நன்றாக காய விடுங்கள். பிறகென்ன சுருக்கங்கள் முகத்திற்கு பை பை சொல்லும். வேண்டாத சதைகள் இறுகி, முகத்தில் வரும் தொய்வினை தடுக்கும்.

சருமத்தை மெருகேற்ற :

மாம்பழத் தோலினை பொடி செய்து கொள்ளுங்கள். அதனுடன் பால் பவுடரை கலந்து பேஸ்ட் போலச் செயுங்கள். இதனை முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவுங்கள். உங்கள் சருமத்தை மெருகேற்றும். மாசு மருவில்லாத க்ளியரான சருமம் கிடைக்கும்.

முகப்பருபோக்க :

முகப்பருக்கள் டீன் ஏஜ் வயதினருக்கு ஒரு தீராத தொல்லைதான். என்ன செய்தாலும் போக வில்லை என்று கவலைப் படாதீர்கள். இந்த பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. மாம்பழ சதைப் பகுதியுடன் சிறிது மஞ்சள், கலந்து முகத்தில் பூசலாம். நாளடைவில் பரு இருந்த இடம் தெரியாது.

இல்லையென்றால், அளவில் சிறிய ஆவக்காயை நீரில் கொதிக்க வைத்து ஆற வைக்கவும். அந்த நீரால் முகம் கழுவினாலும் முகப்பருக்கள் வராது.

சென்சிடிவ் சருமத்திற்கு :

சிலருக்கு க்ரீம் போட்டதும் சருமத்தில் அலர்ஜி ஏற்படும். இதனால் அரிப்பு, சிவந்து போய் எரிச்சல் ஆகியவை ஏற்படும். இதனை கட்டுப் படுத்த, மாம்பழ சதைப் பகுதியுடன், யோகார்ட் கலந்து முகத்தில் பூசுங்கள்.

காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவவும். அலர்ஜி கட்டுக்குள் வரும். சருமத்தில் எந்த பாதிப்பையும் தராது.

மாம்பழம் எவ்வளவு ருசி தருதோ அவ்வளவு பலன்களையும் தரும். ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் நன்மைகள் தர்ற மாம்பழத்தை பழங்களின் ராஜா என்று சொல்வதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

English summary

Mango Facial to improve skin tone

Mango Facial to improve skin tone
Desktop Bottom Promotion