For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐந்தே நாட்களில் பொலிவான சருமத்தைப் பெற தேன் ஃபேஸ் பேக் போடுங்க...

By Maha
|

பழங்காலம் முதலாக தேன் பல்வேறு சரும பராமரிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது கடைகளில் விற்கப்படும் ஏராளமான அழகு சாதனப் பொருட்களிலும் தேன் முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேனை நேரடியாக சரும பராமரிப்புகளுக்குப் பயன்படுத்தினால் எவ்வளவு நன்மை கிடைக்கும்?

அதிலும் தேனைக் கொண்டு அடிக்கடி சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நாம் சந்திக்கும் சரும பிரச்சனைகளான சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், முகப்பரு, கரும்புள்ளிகள், சரும வறட்சி போன்றவற்றைத் தடுக்கலாம். அதிலும் பண்டிகைக் காலங்களில் ஒவ்வொருவரும் பொலிவான தோற்றத்தில் காணப்பட பலரும் ஆசைப்படுவோம்.

உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால், தேனைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட ஆரம்பியுங்கள். சரி, இப்போது தேனைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் மற்றும் எலுமிச்சை மசாஜ்

தேன் மற்றும் எலுமிச்சை மசாஜ்

1 டீஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் மின்னும்.

எண்ணெய் பசை சருமத்தினருக்கு தேன் மற்றும் தயிர்

எண்ணெய் பசை சருமத்தினருக்கு தேன் மற்றும் தயிர்

இந்த ஃபேஸ் மாஸ்க் முகப்பரு, எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு சிறந்தது. அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேனை 1 டேபிள் ஸ்பூன் தயிருடன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

வறட்சியான சருமத்தினருக்கு தேன் மற்றும் பப்பாளி

வறட்சியான சருமத்தினருக்கு தேன் மற்றும் பப்பாளி

நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சரும வறட்சி நீக்கப்பட்டு, முதுமைக் கோடுகள் தெரிவது தடுக்கப்படும்.

கரும்புள்ளிகளுக்கு தேன் ஸ்கரப்

கரும்புள்ளிகளுக்கு தேன் ஸ்கரப்

1 டேபிள் ஸ்பூன் தேனில் 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் கழுவி, பின் அந்த கலவையைக் கொண்டு சருமத்தை வட்ட சுழற்சியில் ஸ்கரப் செய்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவ, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் அகற்றப்படும்.

தேன் மற்றும் மில்க் க்ரீம்

தேன் மற்றும் மில்க் க்ரீம்

1 டேபிள் ஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமத்தில் வறட்சியினால் ஏற்பட்ட சுருக்கங்கள் நீங்கி, சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்படும்.

தேன் மற்றும் வாழைப்பழம்

தேன் மற்றும் வாழைப்பழம்

பிரகாசமான சருமத்தைப் பெற நினைத்தால், 1 டேபிள் ஸ்பூன் தேனில் சிறிது நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து சேர்த்து, 20 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை 5 நாட்கள் தொடர்ந்து செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.

தேன், ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள்

தேன், ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள்

1 டேபிள் ஸ்பூன் தேனுடன், சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, அதில் உள்ள மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் மற்றும் தேன் மூலம் சருமத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Honey To Get Glowing Skin Just In 5 Days

The benefits of honey for skin are many and you must know how to use honey for skin. Use these face mask and honey massages to get glowing and younger skin.
Desktop Bottom Promotion