For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தழும்புகள் மறைய ஒரு பவர்ஃபுல்லான வழி!

|

உங்கள் உடலில் ஒன்றிற்கு மேற்பட்ட தழும்புகள் உள்ளதா?அறுவை சிகிச்சையால் அல்லது, விழுந்த வந்த காயத்தினால் எதுவாய் இருந்தாலும் அது அழகை பாதிக்கும் என்பது உண்மையே.

தழும்பை மறைக்க எத்தனையோ மேக்கப் அல்லது உடைகளைக் கொண்டு மறைக்க நினைத்திருக்கிறீர்களா? ஆனால் அது நிரந்தர தீர்வல்ல.

Home remedy to reduce scars

தழும்பு என்பது காயம்பட்ட இடங்களில், தோலானது தனக்கு தானே ரிப்பேர் செய்து கொள்ளும். அங்கு அதிக அளவு கொலாஜன் உற்பத்தியாகி தழும்பை விட்டுச் செல்கிறது.

தழும்புகளை நீக்க இப்போது எத்தனையோ வழிகள் வந்துள்ளன. லேசர் முறையில் தழும்பை அகற்றலாம். காஸ்ட்லியான க்ரீம்களும் வந்துள்ளன. ஆனால் அவை விலைஅதிகம் என்பதோடு, பக்க விளைவுகளையும் தரும்.

நீங்கள் இயற்கை முறையில் தழும்புகளை நீக்க முயற்சித்திருக்கிறீர்களா? இல்லையெனில் இதை முயற்சித்துப் பாருங்கள்.

தேவையானவை :

சந்தனம் - 1 டேபிள் ஸ்பூன்
தேயிலை மர எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

மேலே கூறிய பொருட்கள் இயற்கையான முறையில் தழும்பு இருக்கும் இடத்தில் புதிய செல்களை உருவாக்குகின்றன. கொலாஜன் இழைகளை விடுவிக்கின்றன. இதனால் தழும்பு மெல்ல மறையும்.

எலுமிச்சை சாறில் இயற்கையான ப்ளீச் செய்யும் ஆற்றல் உள்ளதால் அது சருமத்தை இன்னும் மென்மையாக்கி, தழும்பை லேசாக்கும்.

செய்முறை :

சந்தனம், தேயிலை மர எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து பேஸ்ட் போலச் செய்து கொள்ளுங்கள்.

இதனை தழும்பு உள்ள இடத்தில் போட்டு, 15 நிமிடங்கள் காயவிடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனை இரவில் தூங்குவதற்கு முன் தழும்பில் போட்டுக் கொள்ளலாம். மறு நாள் காலையில் கழுவி விடலாம். தினமும் இவ்வாறு செய்தால், நாளடைவில் தழும்பு மறைந்துவிடும். முயன்று பாருங்கள்.

English summary

Home remedy to reduce scars

Home remedy to reduce scars
Story first published: Thursday, June 23, 2016, 17:20 [IST]
Desktop Bottom Promotion