For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைகள் நிறம் மங்கி, பொலிவின்றி இருக்கிறதா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க!

By Hemalatha
|

சிலருக்கு முகம் ஒரு நிறத்தில், கை ஒரு நிறத்தில் இருக்கும். முகம் நிறமாக இருந்தாலும் கைகள் கருமையடைந்து டல்லாக இருக்கும்.

ஏனெனில் முகத்தை விட கைகள் எளிதில் சூரியக் கதிர்களால் பாதிக்கும். காரணம் அங்கே கொழுப்புகள் மிக குறைவு. அதனால் தோல் மிருதுவாக இருக்கும். எளிதில் சூரியக் கதிர்கள் ஊடுருவும். ஆகவே எளிதில் கருமை ஆகிவிடும்.

Home remedies for removing tan

இதனை தவறாமல் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு வார இறுதியில் பராமரிப்பினை மேற்கொண்டால், உங்களுக்கு அழகிய கைகள் கிடைக்கும். கைகளும் அழகாய் இருந்தால்தானே அழகான தோற்றமும் முழுமையாக இருக்கும். உங்களுக்கான சில குறிப்புகள். படித்து, செய்து, பலனைப் பெறுங்கள் தோழிகளே

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு :

ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றினை எடுத்துக் கொண்டு அதில் கல் உப்பு சிறிதினை சேர்த்து கரையும் வரை கலக்குங்கள்.

பின் அதனை கைகளில் தடவி, நன்றாக நீவி விடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, கழுவலாம். இரண்டுமே இயற்கையான ப்ளீச் ஆகும். அழுக்குகளை சுத்தமாக களைந்து, சருமத்தின் நிறத்தினை மாற்றும். சருமம் மிருதுவாகும்.

கடலை மாவு பேக்!

தேவையானவை :

கடலை மாவு : 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் : ஒரு சிட்டிகை
பால் : அரை கப்

இந்த மூன்றையும் கலந்து கைகளைல் தேய்க்கவும். நன்றாக காய்ந்தபின் கழுவுங்கள். வாரத்தில் மூன்று நாட்கள் செய்தால், கருமை மாறி கைகள் அழகாகிவிடும். காரணம், கடலை மாவு, இயற்கையான ஸ்க்ரப்பகவும், ப்ளீச்சாகவும் செயல்படுகிறது. மஞ்சள் கிருமி நாசினி. மேலும் பால் ஈரப்பததை சருமத்திற்கு அளிக்கிறது.

பப்பாளி மற்றும் தேன் பேக்:

பப்பாளி -3 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்

பப்பாளியை நன்றாக மசித்து, அதனுடன் தேன் சேர்க்கவும். இப்போது கைகளில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து கழுவலாம். தேன் சிறந்த மாய்ஸ்ரைசர். பப்பாளி நிறம் அளிக்கிறது. இறந்த செல்களை அகற்றி, கருமையைம் போக்கச் செய்யும்.

ஆரஞ்சு தோல் பேக் :

கைகளில் சருமத்தின் நிறமே மங்கிப் போய், பொலிவின்றி காணப்பட்டால், ஆரஞ்சு தோல் மிகச் சிறந்த தீர்வு தருகிறது. ஆரஞ்சு தோலை காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.

தேவையான பொடி எடுத்துக் கொண்டு, அதில் பாலினை கலந்து கைகளில் தடவுங்கள். நன்றாக காய்ந்ததும் கழுவிவிடவும். சருமம் நிறம் கூடி தேஜஸ் வருவதை பார்ப்பீர்கள்.

பாதாம் :

பாதாமை இரவில் ஊற வைத்து மறு நாள் அதன் தோலை உரித்து, அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பாதாம் பேஸ்ட்டில் சிறிது சந்தன எண்ணெய் கலந்து கைகளில் தடவுங்கள். இது கருமையை அகற்றி, ஒல்லியான கைகளுக்கு சற்று புஷ்டியை தரும்.

உருளைக் கிழகு சாறு :

உருளைக் கிழங்கு சாறு சூரிய கதிர்களால் பாதிக்கப்பட்ட கருமையை போக்குவதற்கு அருமையான வழியாகும். உருளைக் கிழங்கின் தோலை அகற்றி,அரைத்து, அதிலிருந்து சாற்றினை எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதனை கைகளில் பூசி, காய்ந்ததும் கழுவிவிடுங்கள். நாளடைவில் கருமை இருந்த இடமே தெரியாமல், சருமம் ஒரே நிறத்தைப் பெறும்.

முடிந்த வரை வெளியில் செல்லும் போது சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டுச் செல்லுங்கள். இரவில் தினமும் தயிரை பூசி, காய்ந்ததும் கழுவினாலும் கருமை அகன்று பூப்போன்ற கைகள் உங்களுக்கு கிடைக்கும்.

English summary

Home remedies for removing tan

Home remedies for removing tan
Desktop Bottom Promotion