For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகான பாதங்கள் பெறுவது எப்படி?

|

பாதங்கள் அழகாக இருந்தால் கூடுதல் அழகு தரும். அழகான செருப்புகளை போடலாம். குதிகால்களை மறைக்கும்படி செருப்புகளை தேட வேண்டிய அவசியமில்லை.

வேலை கல்லூரி அல்லது வீட்டில் வேலை இருந்தாலும், சில நிமிடங்களாவது பாதத்திற்கென நேரத்தை ஒதுக்குங்கள். மேலும் வெளியே செல்லும் பெண்களை விட, வீட்டில் இருக்கும் பெண்களுக்குதான் அதிகம் வெடிப்பு வரும். ஆகவே கூடுதல் பராமரிப்பு வீட்டிலிருக்கும் பெண்களுக்கு அவசியம்.

Home remedies to get soft feet

பாதங்களிலுள்ள சொரசொரப்பு நீங்க :

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகள் தங்காது.

கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு நீங்கும். மென்மையான பாதங்களாக திகழும். தினமும் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை பாதத்தில் தேயுங்கள். சொரசொரப்பான பாதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

மிருதுவான பாதங்கள் கிடைக்க :

தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் உப்பு அல்லது சோடா உப்பை குதிகால்களில் தேய்த்து, கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி மாறி மாறி வாரம் மூன்று முறை செய்தால் பாதம் மெத்தென்று ஆகும்.

வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், மென்மையான பாதங்கள் கிடைக்கும்.

வெடிப்பு மறைய :

மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேயுங்கள். 10 நிமிடன்ம் கழித்து பாதத்தை கழுவலாம். இது கால் வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.

மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்.

கற்றாழையில் இருக்கும் சதைபகுதியை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் ஒரே மாதத்தில் வெடிப்பு சரியாகிவிடும்.

உருளைக் கிழங்கி சாறினை எடுத்து பாதங்களில் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து குதிகால்கள் அழகு பெறும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.

பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.

English summary

Home remedies to get soft feet

Home remedies to get soft feet
Story first published: Wednesday, July 20, 2016, 12:17 [IST]
Desktop Bottom Promotion