For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூக்கைச் சுற்றியிருக்கும் வெள்ளைப்புள்ளிகளை நீக்க சில டிப்ஸ்...!

By Maha
|

சிலருக்கு மூக்கைச் சுற்றி வெள்ளையாக சொரசொரவென்று இருக்கும். இதனை வெள்ளைப்புள்ளிகள் என்று அழைப்பர். இதனால் சருமத்தின் மென்மைத்தன்மையை இழப்பதோடு, அவ்விடமும் சற்று அசிங்கமாக காணப்படும். பலரும் வெள்ளைப்புள்ளிகளைப் போக்க குளித்து முடித்ததும், காட்டன் ஈரத்துணியைக் கொண்டு தேய்ப்பார்கள்.

ஆனால் இந்த வெள்ளைப்புள்ளிகளை நீக்க ஒருசில எளிய வழிகள் உள்ளன. அந்த வழிகள் என்னவென்று படித்து தெரிந்து பின்பற்றி, சொரசொரவென்று இருக்கும் மூக்கை மென்மையாக வைத்துக் கொள்ளுங்கள். சரி, இப்போது மூக்கைச் சுற்றியிருக்கும் வெள்ளைப்புள்ளிகளை நீக்க சில டிப்ஸ்களைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்டை

பட்டை

1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து ஒன்றாக கலந்து, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் பட்டை சருமத்துளைகளை விரிவடையச் செய்து, சுத்தம் செய்து, வெள்ளைப்புள்ளிகளை எளிதில் அகற்ற உதவும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், வெள்ளைப்புள்ளிகள் மட்டுமின்றி, சருமத்துளைகளும் சுத்தமாகும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸில் அமிலம், சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, வெள்ளைப்புள்ளிகள் வருவதைக் குறைக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை காட்டனில் நனைத்து, வெள்ளைப்புள்ளிகள் வரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் வெள்ளைப்புள்ளிகள் அகலும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல்

1 டீஸ்பூன் ஆரஞ்சு தோலின் பொடியை எடுத்துக் கொண்டு, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் வேப்பிலை

மஞ்சள் மற்றும் வேப்பிலை

மஞ்சள் மற்றும் வேப்பிலையில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருள், வெள்ளைப்புள்ளிகளை நீக்கும். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

தேன்

தேன்

வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தேனைத் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவ, அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால் வெள்ளைப்புள்ளிகள் நீங்கி, சருமம் பட்டுப்போன்று மென்மையாகும்.

அரிசி மாவு

அரிசி மாவு

ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன், சம அளவில் மஞ்சள் தூள், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை அவ்விடத்தில் தெளித்து மீண்டும் ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், வெள்ளைப்புள்ளிகள் அகலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Whiteheads That Actually Work!

Here are some home remedies for whiteheads that actually work. Read on to know more...
Desktop Bottom Promotion