For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருப்பா பொலிவிழந்து இருக்கும் முகத்தை பிரகாசமாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்...

பொலிவிழந்த முகத்துடனா புத்தாடை அணிந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடப் போகிறீர்கள்? இல்லை தானே. வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடுங்கள்.

|

தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் புத்தாடைகளை வாங்க கடை கடையாக ஏறி இறங்கி அசந்து போயிருப்போம். இதனால் முகமும் பொலிவிழந்து போயிருக்கும். இப்படி பொலிவிழந்த முகத்துடனா புத்தாடை அணிந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடப் போகிறீர்கள்? இல்லை தானே.

Herbal Masks To Get Glowing Skin By Diwali!

முகப்பொலிவை அதிகரிக்க அழகு நிலையம் சென்று நிறைய பணம் செலவழிக்க திட்டம் தீட்டியுள்ளீர்களா? இப்படி தேவையில்லாமல் பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டு வந்தால், எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் முகத்தின் அழகு அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

தினமும் முகத்தை குளிர்ச்சியான பாலைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். அதுவும் பாலை பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுங்கள். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, முகம் பளிச்சென்று காணப்படும்.

கடலை மாவு மாஸ்க்

கடலை மாவு மாஸ்க்

1 டீஸ்பூன் மில்க் க்ரீம்முடன், 1 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

அரிசி மாவு மாஸ்க்

அரிசி மாவு மாஸ்க்

1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், சிறிது பாதாம் எண்ணெய், 1 டீஸ்பூன் தேன் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் தண்ணீர் கொண்டு தேய்த்து மசாஜ் செய்தவாறு கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்படும்.

மசாஜ்

மசாஜ்

தினமும் சிறிது பேபி ஆயிலை கையில் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், சரும செல்கள் ரிலாக்ஸ் அடைந்து, சருமம் பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.

முட்டை மாஸ்க்

முட்டை மாஸ்க்

ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் கிளிசரின் சேர்த்து நன்கு மென்மையாக கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு உலர்ந்த பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

புருவங்கள் மற்றும் கண் இமைகள் அழகாக...

புருவங்கள் மற்றும் கண் இமைகள் அழகாக...

5 துளிகள் விளக்கெண்ணெயுடன், 5 துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, கண் இமைகள் மற்றும் புருவங்களின் மீது தினமும் இரவில் படுக்கும் முன் தடவி வர, கண் இமைகள் மற்றும் புருவங்கள் நன்கு அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.

ஜெல்லட்டின் பவுடர்

ஜெல்லட்டின் பவுடர்

1 டேபிள் ஸ்பூன் நீரில் சிறிது ஜெல்லட்டின் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, அதோடு 1 டீஸ்பூன் தேன் சேர்த்து, முகத்தில் தடவி அதன் மேல் டிஸ்யூ பேப்பரை வைத்து, 2 நிமிடம் கழித்து, உரித்து எடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் வெளியேற்றப்பட்டு, சருமம் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Herbal Masks To Get Glowing Skin By Diwali!

Listed in this article are herbal face masks to get glowing skin by diwali. Take a look!
Desktop Bottom Promotion