முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் ஃபேஸ் பேக்குகள்!

By:
Subscribe to Boldsky

சிலர் முகம் பொலிவோடு இல்லை என்று வருத்தப்படுவார்கள். முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் போதிய தூக்கமின்மை, முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

எனவே உங்கள் முகம் பொலிவோடு இருக்க வேண்டுமானால், சரியான தூக்கத்தை மேற்கொள்வதோடு, முகத்தில் உள்ள இறந்த செல்களை வாரத்திற்கு ஒருமுறையாவது ஃபேஸ் மாஸ்க் போட்டு நீக்க வேண்டும்.

இங்கு முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து உங்கள் முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மைசூர் பருப்பு மற்றும் பால்

மைசூர் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து மிக்ஸியில் போட்டு, பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி முகம் பொலிவோடு இருக்கும்.

காபி பொடி மற்றும் தேன்

1 டேபிள் ஸ்பூன் காபி பொடியை எடுத்து அத்துடன் 1 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஓட்ஸ் மற்றும் தயிர்

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க, 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், முகப்பொலிவு மேம்படும்.

முல்தானி மெட்டி மற்றும் கிளிசரின்

1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின் சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும்.

கடலை மாவு மற்றும் சர்க்கரை

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின் உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் முகப்பொலிவு அதிகரித்திருப்பதைக் காணலாம்.

குறிப்பு

முகத்திற்கு எப்போது ஃபேஸ் பேக் போட்டாலும், அதனை நீரில் கழுவிய பின் சோப்பு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், ஃபேஸ் பேக்கின் முழு பலனைப் பெற முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Have You Tried The Dead Skin Removal Face Packs?

Have You Tried any of these 5 Dead Skin Removal Face Packs? If you want to glow and look beautiful, turn to these very effective face packs.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter