For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடை வெயிலால் ஏற்படும் சரும எரிச்சலைத் தடுக்க ஃபுரூட் ஃபேஸ் பேக் போடுங்க...

By Maha
|

தற்போது சூரியக்கதிர்கள் நம் சருமத்தை சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வெயிலில் சிறிது நேரம் இருந்தாலும், சருமம் கடுமையாக எரிய ஆரம்பிக்கிறது. இப்படி சூரியக்கதிர்களால் மோசமாக பாதிக்கப்பட்ட நம் சருமத்தை மீண்டும் புத்துணர்ச்சியூட்டு குளுமைப்படுத்த சிறந்த வழி ஃபேஸ் பேக் போடுவது தான்.

அதிலும் கோடையில் பழங்களால் சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும செல்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து சருமம் குளிர்ச்சியுடனும் பொலிவோடும் இருக்கும். இங்கு கோடையில் சூரியக்கதிர்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சரும செல்களை குளிர்ச்சியூட்டும் சில பழ ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

கோடையில் வெள்ளரிக்காய் அதிகம் கிடைக்கும். மேலும் இதில் நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது. எனவே அத்தகைய வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சரும செல்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

தர்பூசணி ஃபேஸ் பேக்

தர்பூசணி ஃபேஸ் பேக்

கோடை வெயிலில் இருந்து நம்மை சற்று காக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. இந்த தர்பூசணியை அரைத்து முகத்தில் தடவி உலர வைத்து, ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.

ஆரஞ்சு ஃபேஸ் பேக்

ஆரஞ்சு ஃபேஸ் பேக்

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தின் சாற்றினை முகத்தில் தடவி உலர வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சு கொண்டு முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் வெயிலால் கருமையடைந்த சருமத்தை வெள்ளையாக்கலாம்.

முலாம் பழ ஃபேஸ் பேக்

முலாம் பழ ஃபேஸ் பேக்

முலாம் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது சரும செல்களுக்கு நீர்ச்சத்தை வழங்குவதோடு, போதிய ஊட்டச்சத்துக்களையும் வழங்கும். அதற்கு முலாம் பழத்தை அரைத்து கை, கால், முகத்தில் தடவி ஊற வைத்து தினமும் கழுவ, சருமம் குளிர்ச்சியுடன் இருக்கும்.

திராட்சை ஃபேஸ் பேக்

திராட்சை ஃபேஸ் பேக்

கருப்பு நிற திராட்சையில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, சரும செல்களும் நன்கு குளிர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கும்.

இளநீர் ஃபேஸ் பேக்

இளநீர் ஃபேஸ் பேக்

ஆம், இளநீரைக் குடிப்பதுடன், அதனைக் கொண்டு முகத்தைக் கழுவுவதன் மூலமும் அதில் உள்ள சத்துக்கள் சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் குளிர்ச்சியுடனும் பொலிவோடும் காணப்படும்.

ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

கோடையில் ஸ்ட்ராபெர்ரி பழங்களும் கிடைக்கும். அத்தகைய ஸ்ட்ராபெர்ரி பழங்களை வாங்கி அதில் சிறிதை அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்றவை நீங்கி, முகம் பொலிவோடும் புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fruity Face Packs That Make Your Skin Cool In Summer

Does your skin feel warm and sweaty? Well, then we suggest you use these super cool face packs to beat the summer heat this season.
Desktop Bottom Promotion