சுருக்கமில்லா இளமையான அழகு கிடைக்க தினம் ஒரு ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க !!

சுருக்கம், கரும்புள்ளி, முகப்பரு ஆகிய சரும பிரச்சனைகளை போக்க நீங்கள் அழகு சாதன பொருட்களை தேடி போக வேண்டியதில்லை. தினம் ஒரு ஃபேஸியல் குறிப்புகளை பயன்படுத்துங்கள்.

Written By:
Subscribe to Boldsky

இளமையான தோற்றம் ஒரு வரம். அது எளிதில் எல்லாருக்கும் கிடைக்காது. இயற்கையாகவே சிலருக்கு அமைந்தாலும் நாம் பராமரிப்பதும் இருக்கிறது.

Face pack for 7 days of the week

தினம் ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள். ஒரு மாதத்தில் உங்களிடமிருக்கும் மாற்றத்தை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திங்கள் கிழமை :

திங்கள் கிழமை :

முதல் நாள் தேனிலிருந்து தொடங்குங்கள். தேன் ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் 2 துளி எலுமிச்சை கலந்து முகத்தில் தடவுங்கள்.

10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். முகம் அழுக்கில்லாமல் ஜொலிக்கும்.

செவ்வாய் கிழமை :

செவ்வாய் கிழமை :

ஸ்ட்ரா பெர்ரி சதைப் பகுதியை மசித்து அதனுடன் பால் ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் தேயுங்கள். காய்ந்ததும் கழுவினால் முகம் சுருக்கம் போய், இள்மையாக இருக்கும்.

புதன் கிழமை :

புதன் கிழமை :

யோகார்ட் ஈரப்பதம் அளிக்கும். யோகார்டை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருமை, அழுக்கு அகன்று மென்மையாக மாறும்.

வியாழக் கிழமை :

வியாழக் கிழமை :

கடலை மாவில் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் கழுவுங்கள். சருமம் தளர்வடைவது குறைந்து இறுகும். வயதான தோற்றத்தை தடுக்கும்.

 வெள்ளிக் கிழமை :

வெள்ளிக் கிழமை :

முல்தானி மட்டியில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் முகம் தொய்வடையாமல் பாதுகாக்கும்.

சனிக் கிழமை :

சனிக் கிழமை :

சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிது மஞ்சள் கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து குளித்தால் என்றும் இளமை உங்கள் வசம்.

ஞாயிற்றுக் கிழமை :

ஞாயிற்றுக் கிழமை :

ஞாயிறுகளில் அரிசி வேக வைத்த நீரில் அல்லது அரிசி கஞ்சியை எடுத்து முகத்தில் தடவுங்கள். முகம் கெட்டியாக இறுகியதும் முகம் கழுவினால் சருமம் பளபளக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Face pack for 7 days of the week

Try these different 7 facial packs for boosting your skin in everyday of the week.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter