For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைவிரல் மூட்டுக்களில் அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க உதவும் சில எளிய வழிகள்!

|

உங்கள் கை விரல்களில் உள்ள மூட்டுக்கள் கருப்பாக அசிங்கமாக உள்ளதா? இப்படி கைவிரல் மூட்டுக்கள் கருப்பாக இருப்பதற்கு, அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கம், நிறமிகளின் தேக்கம் போன்றவை காரணங்களாகும்.

Excellent Home Remedies For Dark Finger Joints And Fingers!

உங்கள் கைவிரல் மூட்டுக்கள் உங்கள் கைகளின் அழகைக் கெடுக்கிறதா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை வழிகளைப் பின்பற்றி வாருங்கள். இந்த வழிகளைப் பின்பற்றினால், உங்கள் கைவிரல் மூட்டுக்களில் உள்ள கருமைகளை விரைவில் போக்கலாம்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்கரப்

2 டீஸ்பூன் தேனில், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கைவிரல் மூட்டுக்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைவிரல் மூட்டுக்களில் உள்ள கருமை வேகமாக மறைய ஆரம்பிக்கும்.

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில்

3 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன், 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, கைவிரல் மூட்டுக்களில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் 5 நிமிடம் கழித்து மீண்டும் ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். முக்கியமாக இச்செயலை செய்த பின், கைகளுக்கு லேசாக மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள்.

ஆயில் மசாஜ்

1/2 டீஸ்பூன் ஜொஜோபா ஆயில், 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 1/2 டீஸ்பூன் ரோஸ்மேரி ஆயில் மற்றும் 2-3 துளி எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கை விரல் நகங்கள் மற்றும் கைவிரல் மூட்டுக்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் இக்கலவையைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, நகங்களும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இந்த செயலை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

மில்க் க்ரீம் மற்றும் மஞ்சள்

1 டீஸ்பூன் மில்க் க்ரீம், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கைவிரல் மூட்டுக்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், கைவிரல் மூட்டுக்களில் உள்ள கருமை மறைவதைக் காணலாம்.

English summary

Excellent Home Remedies For Dark Finger Joints And Fingers!

Here are the most effective natural home remedies for dark finger joints and also fingers. Read on to know more...
Story first published: Tuesday, June 21, 2016, 12:11 [IST]
Desktop Bottom Promotion