இரவில் படுக்கும் முன் இந்த ஃபேஸ் பேக்குகளைப் போட்டால் வேகமாக வெள்ளையாகலாம்!

இங்கு சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை இரவில் படுக்கும் முன் போட்டால், வேகமாக சருமம் வெள்ளையாகும்.

Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் சருமத்தின் அழகைத் தக்க வைக்க போதிய பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். அதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட பொருட்களைக் கொண்டு பராமரிப்பதை விட, வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு பராமரிப்பது தான் நல்லது.

DIY Vitamin Rich Facial Packs For Clear Complexion

ஏனெனில் வீட்டில் தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகளில் தான் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை ஏராளமான அளவில் இருக்கும். இதனால் சரும செல்கள் புத்துயிர் பெறுவதுடன், சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சருமத்தின் நிறமும் மேம்படும்.

இங்கு சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை இரவில் படுக்கும் முன் போட்டால், வேகமாக சருமம் வெள்ளையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

நெல்லிக்காய் மற்றும் கடலை மாவு பேக்

2 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை போட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

முந்திரிப்பழம் மற்றும் காபி பேக்

சிறிது முந்திரிப்பழங்கள் மற்றும் காபி பொடியை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் மட்டுமின்றி, மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

எலுமிச்சை மற்றும் தேன் பேக்

2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. மேலும் இது சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்து, முகப்பொலிவை மேம்படுத்தும்.

வாழைப்பழம் மற்றும் ரோஸ் வாட்டர் பேக்

வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கேரட் மற்றும் கொய்யா பேக்

சிறிது கேரட் மற்றும் கொய்யாப் பழத்தை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்க காய்ந்த பின், நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கால் சருமம் சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 4 முறை போட்டு வந்தால், அழகிய சருமத்தைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

DIY Vitamin Rich Facial Packs For Clear Complexion

Here are some do it yourself vitamin rich facial packs for clear complexion. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter