For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் பருக்கள் அதிகமாக உள்ளதா? அதைப் போக்க இந்த மாஸ்க்கை போடுங்க...

இங்கு முகத்தில் அசிங்கமாக இருக்கும் பருக்களைப் போக்கும் கிராம்பு ஃபேஸ் பேக்கை எப்படி போடுவதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

|

உங்கள் முகத்தில் அசிங்கமாக எப்போதும் பருக்கள் உள்ளதா? இதைத் தடுக்க எத்தனையோ அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தியும் தீர்வு கிடைக்கவில்லையா? அப்படியெனில் இயற்கை வழிகளை முயற்சித்துப் பாருங்கள். இதனால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

DIY Clove Face Mask Recipe To Clear Severe Acne!

முகப்பருக்களைப் போக்க ஏராளமான நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் உள்ளன. அதில் ஒன்று தான் கிராம்பு ஃபேஸ் பேக். இது முகத்தில் உள்ள பருக்களை முற்றிலும் நீக்குவதோடு, பருக்களால் ஏற்படும் தழும்புகளையும் முற்றிலும் மறைக்கும்.

சரி, இப்போது முகத்தில் உள்ள பருக்களைப் போக்கும் கிராம்பு ஃபேஸ் பேக்கை எப்படி போடுவதென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெப் #1

ஸ்டெப் #1

பாதி ஆப்பிளை எடுத்து தோலுரித்து, துண்டுகளாக்கி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2

ஸ்டெப் #2

பின் ஒரு கப் நீரை பாத்திரத்தில் ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ இலைகளை சேர்த்து 15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

ஸ்டெப் #3

ஸ்டெப் #3

பின்பு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் ஆப்பிள் பேஸ்ட் மற்றும் 1 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து நன்கு கலந்து, அதோடு 1 துளி கிராம்பு எண்ணெய் சேர்க்க வேண்டும்.

ஸ்டெப் #4

ஸ்டெப் #4

பிறகு அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனால் தேனில் உள்ள அமினோ அமிலம் மற்றும் வைட்டமின் சி, சரும செல்களை புத்துயிர் பெறச் செய்து, ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

ஸ்டெப் #5

ஸ்டெப் #5

அடுத்து முகத்தை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். ஒருவேளை மேக்கப் போட்டிருந்தால், மைல்டு ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் #6

ஸ்டெப் #6

பின் தயாரித்து வைத்துள்ள கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

ஸ்டெப் #7

ஸ்டெப் #7

மாஸ்க் நன்கு காய்ந்த பின், சிறிது நீரைத் தெளித்து, மென்மையாக 2 நிமிடம் ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஸ்டெப் #8

ஸ்டெப் #8

இறுதியில் முகத்தை துணியால் துடைத்துவிட்டு, சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை போட்டு வந்தால், முகத்தில் உள்ள அசிங்கமான முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

DIY Clove Face Mask Recipe To Clear Severe Acne!

Get rid of acne with this clove face mask recipe. Listed here is a step-by-step method of this DIY acne face mask.
Desktop Bottom Promotion